அரியலூரில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க விவசாயிகள் மனு

அரியலூரில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க விவசாயிகள் மனு
X

நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க வேண்டும் என விவசாயிகள் மனு.

கடந்த ஆண்டு கொள்முதல் நிலையம் செயல்பட்ட இடத்தில் மீண்டும் திறக்கப்பட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள பிள்ளைப்பாளையம் ஊராட்சியில் 1250 ஏக்கர் பரப்பளவில் வடவார்தலைப்பு வாய்க்கால் மூலம் சம்பா நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது விவசாயிகள் நெற்பயிரை அறுவடை செய்து வருகின்றனர். இதனால் கடந்த ஆண்டு கொள்முதல் நிலையம் செயல்பட்ட இடத்தில் மீண்டும் திறக்கப்பட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த விவசாயிகள் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதியிடம் மனு அளித்தனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்