பழுதடைந்த டிரான்ஸ்பார்மரை சீரமைக்ககோரி விவசாயிகள் மின்நிலையம் முற்றுகை

பழுதடைந்த டிரான்ஸ் பார்மரை சீரமைக்க கோரி காய்ந்த பயிர்களுடன் துணை மின் நிலையத்தை விவசாயிகள் முற்றுகை
அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி அடுத்த தேளூர் துணை மின் நிலையத்திலிருந்து செட்டிதிருக்கோணம் கிராமத்திற்கு மின்சாரம் வினியோகிக்கபட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த ஒரு வார காலமாக டிரான்ஸ் பார்மர் பழுதால் மின்மோட்டார் செயல்படாமல் உள்ளதால் தண்ணீரின்றி கரும்பு, உளுந்து, எள், கடலை ஆகிய பயிர்கள் காய்ந்தன. இது குறிந்து அதகாரிகளிடம் பல முறை கூறி எந்த பலனும் இல்லாததால், விவசாயிகள் காய்ந்த பயிர்களை கையில் எடுத்து கொண்டு துணை மின் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து கயர்லாபாத் போலீசார் சம்பவயிடத்திற்கு வந்து விவசாயிகள் மற்றும் மின்சார வாரிய அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அதில் டிரான்ஸ் பார்மர் பழுது சீர் செய்யும் வரை தற்காலிகமாக மாற்றொரு டிரான்ஸ் பார்மரில் இணைப்பு தருகிறோம். அதே சமயத்தில் மற்ற விவசாயிகளுடன் கலந்துபேசி, மின் மோட்டாரை இயக்க வேண்டும் என கூறியதையடுத்து விவசாயிகள் கலைந்து சென்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu