மின் சிக்கன வாரத்தை முன்னிட்டு செந்துறை நகரில் விழிப்புணர்வு பேரணி

மின் சிக்கன வாரத்தை முன்னிட்டு செந்துறை நகரில் விழிப்புணர்வு பேரணி
X

செந்துறை நகரில் மின் சிக்கன வாரம் கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு மின் சிக்கன விழிப்புணர்வு பேரணி நடை பெற்றது.


செந்துறை துணை மின்நிலையம் சார்பாக மின்சிக்கன வாரம் கடை பிடிக்கப்படுவதை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

அரியலூர் மாவட்டம் செந்துறை நகரில் அமைந்துள்ள துணை மின் நிலையம் சார்பாக மின் சிக்கன வாரம் கடைப்பிடிக்கப்படுவதை முன்னிட்டு மின் சிக்கன விழிப்புணர்வு பேரணி இன்று நடை பெற்றது.

செந்துறை பேருந்துநிலையம் முன்பு விழிப்புணர்வு பேரணியை தலைமை தாங்கி உதவி செயற்பொறியாளர் பொன்.சங்கர் கொடியசைத்து துவக்கிவைத்தார். நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்த பேரணியில் மின்சார சிக்கனம் குறித்து கோஷம் எழுப்பியபடியே பொதுமக்களுக்கு மின்சார சிக்கனம் மற்றும் பாதுகாப்பு குறித்து நோட்டீசும் வழங்கினர்.

செந்துறை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் முடிந்த பேரணியில் உதவி மின்பொறியாளர் மணிகண்டன் உள்ளிட்ட மின்வாரிய ஊழியர்கள், மற்றும் பணியாளர்கள் திரளானோர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!