அரியலூர்: 753 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு விறுவிறுப்பு

753 வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு விறுவிறுப்பான நடைபெற்று வருகிறது.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள 753 வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
அரியலூர் மாவட்டத்தில் அரியலூர் ஜெயங்கொண்டம் ஆகிய இரு சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 5 லட்சத்து 30 ஆயிரத்து 25 வாக்காளர்கள் வாக்களிக்க 355 மையங்களில் 753 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன, 4556 அலுவலர்கள் வாக்கு மையங்களில் பணியாற்றுகின்றனர். இதில் 144 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு துணை ராணுவத்தினருடன் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அரியலூர் சட்டமன்றத்தில் பதிமூன்று வேட்பாளர்களும், ஜெயங்கொண்டம் சட்டமன்றத்தில் 13 வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். காலை 6 மணிக்கு வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டு இயந்திரங்கள் சரிபார்க்கப்பட்ட பின்னர், வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டது. இதனையடுத்து சரியாக ஏழு மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.
அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் ரத்னா அரியலூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் தனது வாக்கை செலுத்தினர். இந்திய ஜனநாயக கட்சி அரியலூர் சட்டமன்ற வேட்பாளர் ஜவஹர் மேலக்குடிகாடு கிராமத்தில் தனது வாக்கை செலுத்தினர். ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் சொர்ணலதா காடுவெட்டி கிராமத்தில் தனது வாக்கினை பதிவு செய்தார்.
சிதம்பரம் தொகுதி எம்பியும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவருமான தொல் திருமாவளவன் அங்கனூர் கிராமத்தில் தனது வாக்கினை செலுத்தினார். அரியலூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளரும் அரசு கொறடாவுமான தாமரை ராஜேந்திரன் தாமரைக் குளம் கிராமத்தில் தனது வாக்கினை செலுத்தினர்.
அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வருகை தரும் வாக்காளர்களுக்கு கொரோனா தொற்று பரவலை தடைசெய்யும் பொருட்டு வெப்ப பரிசோதனை செய்யப்பட்டு சனிடைசர் வழங்கப்பட்டு முககவசம் மற்றும் கையுறை வழங்கப்படுகிறது. இதனையடுத்து வட்டமிட்ட இடங்களில் சமூக இடைவெளியுடன் வாக்காளர்கள் நிற்கவைக்கப்பட்டு ஒவ்வொருவராக அனுப்பப்படுகின்றனர். பின்னர் அவர்களின் ஆவணங்கள் பரிசோதனை செய்யப்பட்டு கையில் அடையாள மை வைத்த விட அவர்கள் தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர். இம்முறை அனைத்து வாக்காளர்களும் தாங்கள் செலுத்தும் வாக்கினை உறுதிப்படுத்தும் வகையில் வாக்கு செலுத்தும் இயந்திரத்திற்கு அருகாமையில் வாக்கினை உறுதி செய்யும் இயந்திரத்தில் துண்டு சீட்டில் பதிவுகள் வரப்பெற்று பின்னர் அந்த சீட்டு பெட்டியில் விழும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அரியலூர் மாவட்டத்தில் அமைதியான விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu