/* */

ஆவணமின்றி எடுத்து சென்ற ரூ.1 லட்சம் பறிமுதல்

உரிய ஆவணமின்றி காரில் எடுத்து செல்லப்பட்ட ரூ.1 லட்சம் பறிமுதல்

HIGHLIGHTS

ஆவணமின்றி எடுத்து சென்ற  ரூ.1 லட்சம் பறிமுதல்
X

உரிய ஆவணமின்றி காரில் எடுத்து செல்லப்பட்ட ரூ.1 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தா.பழூர் அடுத்த மதனத்தூர் பேருந்து நிறுத்தத்தில், மண்டல துணை வட்டாட்சியர் கனகராஜ் தலைமையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது நெய்வேலியை சேர்ந்த ரத்னாண்டவர் என்பவர் காரில் கும்பகோணம் நோக்கி சென்றுகொண்டிருந்தார். அவரது காரை மறித்து அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் உரிய ஆவணமின்றி ரூ. 1 லட்சம் ரொக்கப் பணம் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து பணத்தைப் பறிமுதல் செய்து ஜெயங்கொண்டம் சார் நிலை கருவூல அலுவலகத்தில் உதவி கருவூல அலுவலர் சுரேஷிடம் ஒப்படைத்தனர். இந்த நிகழ்வில் ஜெயங்கொண்டம் தாசில்தார் கலைவாணன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன், தலைமை காவலர் தவசீலன், மேகலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 6 March 2021 4:25 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பெண்மை சக்தியைப் போற்றும் உலக மகளிர் தின வாழ்த்துக்கள்
  2. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றுவோம்..! வல்லமை வளரும்..!
  3. ஆன்மீகம்
    விநாயகனே... வினை தீர்ப்பவனே! - இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகளை...
  4. சினிமா
    Indian 2 டிரைலர் எப்ப ரிலீஸ் தெரியுமா?
  5. சிங்காநல்லூர்
    போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை அடமானம் வைத்து மோசடி செய்ததாக புகார்
  6. லைஃப்ஸ்டைல்
    பிறப்பை கொண்டாடுவோம் வாங்க..! பிறந்தநாள் வாழ்த்து சொல்வோமா..?
  7. வீடியோ
    🔴LIVE : சத்யராஜ் மீண்டும் சர்ச்சை பேச்சு | WEAPON Movie Press Meet...
  8. கோவை மாநகர்
    கோவை ஆட்சியர் அலுவலகத்தில் மேற்கூரை சரிந்து விபத்து ; டூவிலர்கள்
  9. கோவை மாநகர்
    இந்து மதம், இந்தி மொழி, இந்தி பேசும் மக்களுக்கு எதிரான கட்சி திமுக :...
  10. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 1,192 கன அடியாக அதிகரிப்பு