அரியலூர் தி.மு.க.இளைஞரணி சார்பில் திராவிடமாடல் பயிற்சி பாசறை கூட்டம்

அரியலூர் தி.மு.க.இளைஞரணி சார்பில் திராவிடமாடல் பயிற்சி பாசறை கூட்டம்
X

அரியலூரில் நடந்த திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டத்தில்  அமைச்சர் சிவசங்கர் பேசினார்.

அரியலூரில் நடந்த திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டத்தில் அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார்.

அரியலூர் புறவழிச்சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அரியலூர் மாவட்ட தி.மு.க. இளைஞரணி சார்பில் திராவிட மாடல் பயிற்சிப்பாசறை கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். வே.மதிமாறன், கோவி.லெனின் ஆகியோர் மாநில சுயாட்சி, திராவிட இயக்க வரலாறு என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. க.சொ.க.கண்ணன், மாநில சட்டதிட்ட திருத்தக்குழு உறுப்பினர் சுபா.சந்திரசேகர், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தெய்வ.இளையராஜா உள்ளிட்ட இளைஞரணி பொருப்பாளர்கள் மற்றும் இளைஞரணி தொண்டர்கள் பயிற்றி பாசறை கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது