அரியலூர் பேருந்து நிலையத்தில் திமுகவின் புதிய உறுப்பினர் சேர்த்தல் நிகழ்ச்சி

அரியலூர் பேருந்து நிலையத்தில் திமுகவின் புதிய உறுப்பினர் சேர்த்தல் நிகழ்ச்சி
X

அரியலூர் பேருந்து நிலையத்தில் திமுக கட்சியின் புதிய உறுப்பினர் சேர்த்தல் நிகழ்ச்சியில் மாவட்ட கழக செயலாளரும் , பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சருமான எஸ். எஸ். சிவசங்கர் உறுப்பினர் சேர்க்கையை துவக்கிவைத்தார்.


அனைத்து வார்டுகளிலும் புதிய உறுப்பினர்களை அதிகளவில் சேர்க்க வார்டு செயலாளர்களுக்கு அமைச்சர் சிவசங்கர் ஆலோசனை வழங்கினார்.

அரியலூர் பேருந்து நிலையத்தில் திமுக கட்சியின் புதிய உறுப்பினர் சேர்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. திமுக அரியலூர் நகரச்செயலாளர் முருகேசன் தலைமை தாங்கினார். மாவட்ட கழக செயலாளரும் , பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சருமான எஸ். எஸ். சிவசங்கர் உறுப்பினர் சேர்க்கையை துவக்கிவைத்தார்.

அரியலூர் நகரில் உள்ள அனைத்து வார்டுகளிலும் புதிய உறுப்பினர்களை அதிக அளிவில் சேர்க்க வார்டு செயலாளர்களுக்கு அமைச்சர் ஆலோசனை வழங்கினார்.

இதனையடுத்து அரியலூர் புறவழிச்சாலையில் உள்ள திமுக மாவட்ட அலுவலகத்தில் கழக சட்டதிட்டக்குழு உறுப்பினர் சுபா. சந்திரசேகர் தலைமையில் திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் திமுக அரியலூர் மாவட்ட கழக செயலாளரும் , பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சருமான மாண்புமிகு எஸ். எஸ். சிவசங்கர் புதிய உறுப்பினர் சேர்த்தல் படிவத்தை அனைத்து ஒன்றிய, நகர, பேரூர், கிளைச் செயலாளர்கள் வசம் வழங்கினார்.

அனைத்து கிளைகளிலும் புதிய உறுப்பினர்கள் சேர்க்கையை விரைவு படுத்தவும், இளைஞர்களை அதிக அளவில் உறுப்பினர்களாக சேர்க்கவும் ஆலோசனை வழங்கினார். நிகழ்ச்சியில் அனைத்து ஒன்றிய செயலாளர்கள், பேருர், நகர், கிளை கழக செயலாளர்கள் மற்றும் பொருப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
கல்குவாரி விபத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் - முதலமைச்சர் ஸ்டாலினின் நிவாரண அறிவிப்பு!