வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு

வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர்  நேரில் பார்வையிட்டு ஆய்வு
X

அரியலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


ஊராட்சித்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அரியலூர் மாவட்டம், அரியலூர் ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி இன்று (01.07.2022) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் பொதுமக்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் அரியலூர் ஊராட்சி ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி இன்றைய தினம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வில் அரியலூர் ஊராட்சி ஒன்றியம், கயர்லாபாத் ஊராட்சியில் கயர்லாபாத் - மண்டையன்குடிசல் சாலையில் தார் சாலை மற்றும் பாலம் அமைத்தல் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட பணியையும், பெரியநாகலூர் ஊராட்சியில், பெரியநாகலூர் - அய்யனார் கோவில் சாலை பலப்படுத்துதல் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட பணியையும் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும், இந்த ஆய்வின் போது சாலைப்பணிகளை முறையாக பராமரிக்கவும், சாலையின் இருபுறங்களிலும் மழை நீர் தடையின்றி செல்லும் வகையில் வரத்துவாரிகளை முறையாக தூர்வாரவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தேவி, குணசேகரன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!