ராஜீவ்காந்தி நினைவு நாளில் முகக்கவசம் கபசுரகுடிநீர் வழங்கல்

ராஜீவ்காந்தி நினைவு நாளில் முகக்கவசம் கபசுரகுடிநீர் வழங்கல்
X
முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி 30ஆவது ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்ச்சி அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்றது.

முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி 30ஆவது ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்ச்சி அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்றது. அரியலூர் நகரத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு முன்பு மாவட்ட தலைவர் A. சங்கர் தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் அரியலூர் நகர தலைவர் எஸ். எம். சந்திரசேகர் முன்னிலை வகித்தார்.

வட்டாரத் தலைவர்கள் சீனிவாசன், P.பாலகிருஷ்ணன், மாநில குழு உறுப்பினர் சிவகுமார், மாவட்ட செயலாளர்கள் பால சிவகுமார், பவானி சிவா, தொழிற்சங்க தலைவர் JP ராஜா, துணைத் தலைவர் A.R.செந்தில்வேல், வார்டு தலைவர்கள் ஆண்டனிதாஸ், நந்தன், ராஜ்குமார், பழனிராஜ், சங்கர், குணசேகர் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் 2000 பொதுமக்களுக்கு முகக்கவசம் வழங்கப்பட்டது. வருகை தந்த அனைவருக்கும் பொது மக்களுக்கும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!