அரியலூர் மாவட்டத்தில் 5-ம் கட்டமாக நேரடி கொள்முதல் நிலையங்கள் திறப்பு

அரியலூர் மாவட்டத்தில் 5-ம் கட்டமாக  நேரடி கொள்முதல் நிலையங்கள் திறப்பு
X

நேரடி  கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு உள்ளன.

அரியலூர் மாவட்டத்தில் 5-ம் கட்டமாக குருவாடி , சன்னாசி நல்லூரில் நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு உள்ளன.

அரியலூர் மாவட்டத்தில் 2020-2021-ஆம் ஆண்டில் கரீப் சாகுபடி மூன்றாம் பருவத்தில் நடைபெறும் அறுவடையை முன்னிட்டு, விவசாயிகள் பயன்பெறும் வகையில், ஐந்தாம் கட்டமாக, அரியலூர் மாவட்டம், அரியலூர் வட்டத்தில் குருவாடி மற்றும் செந்துறை வட்டத்தில், சன்னாசிநல்லூர் ஆகிய கிராமங்களில், 17.09.2021 அன்று முதல் நேரடி கொள்முதல் நிலையம் திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டு, செயல்பட்டு வருகிறது.

மேற்கண்ட அரியலூர் வட்டத்தில் குருவாடி மற்றும் செந்துறை வட்டத்தில் சன்னாசிநல்லூர் ஆகிய கிராமங்களில் நேரடி கொள்முதல் நிலையம் பயன்பாட்டிற்கு வந்துள்ளதைத்தொடர்ந்து, அருகில் உள்ள விவசாயப் பெருமக்கள், நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை பயன்படுத்தி பயன்பெறுமாறு அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி வேண்டுகோள் விடுத்துள்ளா

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!