பச்சை கம்பளம் விரித்தது போல் காட்சி அளிக்கும் கருணை கிழங்கு சாகுபடி

பச்சை கம்பளம் விரித்தது போல் காட்சி அளிக்கும் கருணை கிழங்கு சாகுபடி
X

அரியலூர் மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள கருணை கிழங்கு பயிர்கள் பச்சை கம்பளம் விரித்தது போல் காட்சி அளிக்கிறது.

அரியலூர் மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள கருணைகிழங்கு பயிர்கள் பச்சை கம்பளம் விரிக்கப்பட்டது போல் உள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் பல ஏக்கர்களில் கருணை கிழங்கு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. கயர்லாபாத் கிராமத்தில் தற்போது ஒரு அடி உயரத்தில் கருணை கிழங்கு செடிகள் வளர்ந்து பச்சை கம்பளம் விரித்தது போல் காட்சி அளிக்கிறது.

கார்த்திகை மாத கடைசியில் கிழங்குகள் அறுவடை செய்து தை பொங்கல் பண்டிகைக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படும் என்று விவசாயிகள் கூறகின்றனர். தற்போது பெய்துவரும் தொடர்மழையால் கருணைகிழங்கு பயிர்கள் நல்ல ஊட்டம் பெற்றுள்ளதால், நல்லமகசூல் கிடைக்கும் என கருதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.




Tags

Next Story
இது தெரியாம போச்சே ,காலை எழுந்து வெந்நீர் பருகுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா