யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி நிறுவன சேர்மனுக்கு நீதிமன்ற வாரண்ட்

யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி நிறுவன சேர்மனுக்கு நீதிமன்ற வாரண்ட்
X

பைல் படம்.

நீதிமன்றம் உத்தரவிட்ட இழப்பீடு தொகையை விவசாயிகளுக்கு கொடுக்காததால் சேர்மன், மண்டல மேலாளர் கிளைமேலாளருக்கு நீதிமன்ற வாரண்ட்.

அரியலூர்-செந்துறை அருகே உள்ள குழுமூர் கிராமத்தைச் சேர்ந்த 60 விவசாயிகள் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு பயிர் காப்பீடு செய்துள்ளனர். நெல், மக்காச்சோளம், பருத்தி, கடலை உள்ளிட்ட பயிர்கள் இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் பயிர் காப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என மேற்கண்ட நிறுவனத்தில் முறையிட்டுள்ளனர். இன்சூரன்ஸ் நிறுவனம் காப்பீட்டு தொகை வழங்காததால், விவசாயிகள் அனைவரும் ஒன்றிணைந்து நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதில் விவசாயிகள் மன உளைச்சலுக்கு ஆளாகி ரூ.2000/- நீதிமன்ற செலவு 5000/- என 60 விவசாயிகளுக்கு 9 லட்சத்து 33 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என நுகர்வோர் நீதிமன்றம் 4 ஆண்டுகளுக்கு முன் உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்ட இழப்பீடு தொகையை விவசாயிகளுக்கு கொடுக்காததால் நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி ராமராஜ், யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி நிறுவனத்தின் சேர்மன், மண்டல மேலாளர் மற்றும் அரியலூர் கிளை மேலாளர் ஆகியோருக்கு வாரண்ட் பிறப்பித்தது நீதிபதி உத்தரவிட்டார். இந்த உத்தரவு அரியலூர் மாவட்ட விவசாயிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!