தா.பழூரில் எண்ணும், எழுத்தும் இயக்க பயிற்சி வகுப்பு

தா.பழூரில் எண்ணும், எழுத்தும் இயக்க பயிற்சி வகுப்பு
X

தா.பழூர் வட்டாரத்தில் 45 ஆசிரியர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்று வருகின்றனர்.


தா.பழூர் வட்டாரத்தில் எண்ணும் எழுத்தும் இயக்க பயிற்சியில் 45 ஆசிரியர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்று வருகின்றனர்.

அரியலூர்- தமிழக முதல்வர் அறிவித்துள்ள எண்ணும் எழுத்தும் இயக்கம் பயிற்சி வகுப்பு தா.பழூரில் நடைபெற்று வருகிறது.

தமிழக முதல்வர் 2025-ஆம் ஆண்டுக்குள் முழுமையான இலக்கை அடைய வேண்டி ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு எண்ணும் எழுத்தும் இயக்கம் அறிவித்தார். அரியலூர் மாவட்டம் தா.பழூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் வட்டார அளவிலான எண்ணும் எழுத்தும் இயக்கம் பயிற்சி வகுப்பு நடைபெற்று வருகிறது. இதில் தா.பழூர் வட்டாரத்தில் 45 ஆசிரியர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்று வருகின்றனர். இந்த பயிற்சி வகுப்புகள் 6ம் தேதி முதல் தொடங்கி 10ம் தேதி வரை நடைபெற உள்ளது. வட்டார கல்வி அலுவலர் அசோகன் தலைமையில், அரசு மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர் காந்திமதி முன்னிலையில், மேற்பார்வையாளர் சுதா உள்ளிட்டோர் கலந்து கொண்டு பயிற்சியளித்து வருகின்றனர். ஆசிரியர் பயிற்றுநர் சிவா மற்றும் ஆசிரிய கருத்தாளர்கள் கலந்துகொண்டு பயிற்சி பெற்று வருகின்றனர்.

Tags

Next Story
தேய்பிறை அஷ்டமி விழா கோலாகலம்: மல்லசமுத்திரம் காலபைரவர் கோயிலில் சிறப்பு வழிபாடு