கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை அரியலூர் கலெக்டர் ஆய்வு

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை அரியலூர்  கலெக்டர் ஆய்வு
X

அரியலூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகளை கலெக்டர் ரமண சரஸ்வதி ஆய்வு செய்தார்.

அரியலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி ஆய்வு செய்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி, அதிகரித்து வரும் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தவும், கொரோனா தொற்றால் பாதிக்கட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கும் வகையில் தேவையான கட்டமைப்பு வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் நபர்களின் சிகிச்சைக்காக 400 படுக்கை வசதிகளும், 40 அவசர சிகிச்சை வசதி கொண்ட படுக்கைகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு வழங்குவதற்காக ஒரு மணி நேரத்தில் 1000 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி மையமும், உற்பத்தி செய்யப்பட்ட ஆக்சிஜன்களை சேமிக்கும் வகையில் 8500 லிட்டர் கொள்ளளவு கொண்ட 3 ஆக்சிஜன் டேங்குகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

மேலும், ஆக்சிஜன் உருளை, ஆக்சிஜன் செறிவூட்டி கருவிகளும் தேவையான அளவில் இருப்பு வைக்கப்பட்டு, நோயாளிகளுக்கு சிகிச்சை அளிககை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இவற்றின் செயல்பாடுகள் மற்றும் தற்போதைய பயன்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், புறநோயாளிகளுக்கு தற்போது அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும், தேவைப்படும் பட்சத்தில் சிகிச்சை அளிக்கும் வகையில் மாற்று இடம் தயார்நிலையில் வைத்துக்கொள்ள மருத்துவர்களுக்கு அறிவுறுரை வழங்கினார்.

மேலும், ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களுக்காக 100 படுக்கை வசதிகளுடன், 8 அவசர சிகிச்சை படுக்கைகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், ஆக்சிஜன் வசதி தேவைப்படும் நோயாளிகளுக்காக ஆக்சிஜன் உருளை, ஆக்சிஜன் செறிவூட்டி கருவிகளும் தேவையான அளவில் இருப்பு வைக்கப்பட்டு, சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

அதன் அடிப்படையில், அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பார்வையிட்ட மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் நபர்களின் சிகிச்சைக்காக போர்கால அடிப்படையில் மருத்துவம் மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்த தொடர்புடைய அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி அறிவுறுத்தினார்.

இந்தஆய்வின்போது, கோட்டாட்சியர்கள் ஏழுமலை (அரியலூர்), அமர்நாத் (உடையார்பாளையம்), மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் முத்துகிருஷ்ணன், மருத்துவர்கள் ரமேஷ், கண்மணி, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலர் உஷா, வட்டாட்சியர்கள் ராஜமூர்த்தி (அரியலூர்), ஆனந்தன் (ஜெயங்கொண்டம்), வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாகரன் மற்றும் பணியாளர்கள், செவிலியர்கள், அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags

Next Story
வங்கி தேர்வில் முதலிடம் ராசிபுரம் மாணவனுக்கு வாழ்த்துகள் மலர்ந்த வரவேற்பு..!