அரியலூரில் நடந்த வணிகர் சங்க சிறப்பு முகாமில் கொரோனா தடுப்பூசி

அரியலூரில் நடந்த வணிகர் சங்க சிறப்பு முகாமில்  கொரோனா தடுப்பூசி
X

அரியலூர் வணிகர் சங்க கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமில் மொத்தம் 152 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

அரியலூர் வணிகர் சங்க கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமில் மொத்தம் 152 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

அரியலூர் வணிகர் சங்கம் சார்பில் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. அரியலூர் பாண்டியன் காம்ப்ளக்சில் நடைபெற்ற தடுப்பூசி முகாமில் கடை வியாபாரிகள், கடைஊழியர்கள், வணிகர் சங்க உறுப்பினர்கள் ஆகியோருக்கு கொரோனா முதல் தடுப்பூசி மற்றும் இரண்டாம் தடுப்பூசி மற்றும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இப்பணியில் வட்டார மருத்துவ அலுவலர் கார்த்திகாராஜ், மருத்துவமல்லா மேற்பார்வையாளர் ஸ்மித்சைமன் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் ஜிஜின், கார்த்திக், சிவா மற்றும் செவிலியர்கள் பங்கேற்றனர்

சிறப்பு முகாமில் முதல் தவணை தடுப்பூசி 4 நபர்களுக்கு, இரண்டாம் தவணை தடுப்பூசி 12 நபர்களுக்கு, (மூன்றாம்) ஊக்குவிப்புத்தவணை 136 நபர்களுக்கு என மொத்தம் 152 நபர்களுக்கு பூஸ்டர் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

Tags

Next Story
AI கருவிகள் மூலம் மார்க்கெட் கணிப்புகளை இன்னும் தெளிவாக்குங்கள்!