அரியலூர் மாவட்டத்தில் இன்று 4 பேருக்கு கொரோனா; ஒருவர் உயிரிழப்பு
அரியலூர் மாவட்டத்தில் இன்று மட்டும் கொரோனாவால் 4 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இன்று ஒருவர் உயிரிழப்பு. இன்று குணமடைந்து வீடு திரும்பியர்வர்கள் 8 பேர். மருத்துமனைகளில் 73 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் இன்றுவரை 16,736 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனாவில் இருந்து 16,406 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்றிற்கு இதுவரை 257 பேர் உயிரிழந்துள்ளனர். மருத்துவமனைகளில் இன்று எடுக்கப்பட்ட மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டவர்கள் 608 பேர். இதுவரை 3,13,584 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் 16,736 பேர், நோய்த்தொற்று இல்லாதவர்கள் 2,96,848 பேர்.
மாவட்டத்தில் இன்று, கொரோனா முன்தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்கள் 200 பேர். இதில் முதல் தடுப்பூசியை இன்று 160 பேர் போட்டுக் கொண்டுள்ளனர். 2ம் தடுப்பூசியை இன்று 40பேர் போட்டுக் கொண்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu