அரியலூர் மாவட்டத்தில் இன்று 14 பேருக்கு பெருந்தொற்று

அரியலூர் மாவட்டத்தில் இன்று 14 பேருக்கு பெருந்தொற்று
X

கோப்பு படம்

அரியலூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில், 14 பேருக்கு பெருந்தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் இன்று மட்டும் கொரோனாவால் 14 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று, மாவட்டத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மாவட்டத்தில் இன்று குணமடைந்து வீடு திரும்பியர்வர்கள் 15 பேர். மருத்துமனைகளில் 135 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று வரை, அரியலூர் மாவட்டத்தில் 16,570 பேர் பெருந்தொற்ற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவில் இருந்து 16,182 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்றிற்கு இதுவரை 253 பேர் உயிரிழந்துள்ளனர்.

அரியலூர் மாவட்டத்தில் இதுவரை நடத்தப்பட்ட சிறப்பு முகாம்கள் 12,200. இதில் பரிசோதனை செய்யப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை 5,94,152. அதில் மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டவர்கள் 38,680 பேர். முகாம்களில் நடத்தப்பட்ட பரிசோதனைனகளில் நோய்தொற்று உறுதிசெய்யப்பட்டவர்கள் 1,826 பேர். நோய்தொற்று இல்லாதவர்கள் 36,750 பேர். பரிசோதனை முடிவு வரவேண்டியவர்கள் 104 பேர்.

மாவட்ட அளவில், இன்று கொரோனா முன்தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்கள் 2246 பேர். இதில் முதல் தடுப்பூசியை இன்று 1462 பேர் போட்டுக் கொண்டுள்ளனர். 2ம் தடுப்பூசியை இன்று 784 பேர் போட்டுக் கொண்டுள்ளனர்.

Tags

Next Story
Sudden Halt in Pongal Package Distribution at Erode East Ration Shops..!