சோலைவனம் மற்றும் அறம் ஆஸ்திரேலியா தன்னார்வஅமைப்பின் சார்பில் நிவாரணநிதி
தமிழ்நாடு முதலமைச்சர் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசின் முனைப்பான முயற்சிகளுக்கு நமது சமுதாயத்தின் அனைவரும் தங்களால் இயன்ற வகையில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராலமாக நன்கொடை மற்றும் மருத்துவ உதவிகளை வழங்கிட கேட்டுக்கொண்டார்கள். அதன் அடிப்படையில், அரியலூர் மாவட்டம், சோலைவனம் மற்றும் அறம் ஆஸ்திரேலியா தன்னார்வ அமைப்பின் சார்பில் ரூ.8 இலட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான 10 ஆக்சிஜன் செறிவூட்டல் கருவிகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த கருவிகள் அனைத்தும் நடமாடும் வாகனங்கள் மூலம் கிராமங்களில் உள்ள நோயாளிகளை பாதுகாப்பாக மருத்துவமனைக்கு அழைத்துவரப் பயன்படுத்தப்படுகின்றன. இந்த வாகனத்தை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இக்கருவி மூலம் ஆக்சிஜன் வசதி தேவைப்படும் நபர்களின் சிகிச்சைக்காக சிலிண்டர் இல்லாமல் காற்றிலிருந்து ஆக்சிஜன் உற்பத்தி செய்து, நோயாளிகளுக்கு வழங்க முடியும் என்பது குறிப்பிடதக்கது. மேலும், கொரோனா பெருந்தொற்று காலத்தில் மருத்துவம் மற்றும் பிற உதவி தேவைப்படும் நபர்களின் வசதிகளுக்காக அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் தன்னார்வ அமைப்பினர்கள் இதுபோன்ற தங்களால் இயன்ற உதவிகளை செய்ய முன்வர வேண்டும் எனவும், இந்த ஆக்சிஜன் செறிவூட்டல் கருவிகளை வழங்கிய அமைப்பினர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நன்றிகளையும், வாழ்த்துக்களையும் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்தார்.
இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ஜெய்னுலாப்தீன் மற்றும் சோலைவனம் தன்னார்வ அமைப்பினர் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu