அரியலூர் : மூத்த குடிமக்கள் நலன் காக்கும் காவல்துறை
அரியலூர் மாவட்ட காவல்துறை காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் விடுத்துள்ள செய்திகுறிப்பில்,
கொரோனா 2ம் ஆலை பரவல் காரணமாக தமிழ் நாடு முழுவதும் 24.05.2021 முதல் 30.05.2021 வரை தளர்வுகள் அற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அரியலூர் மாவட்ட தளர்வுகள் அற்ற ஊரடங்கில் தனியாக வாழும் மற்றும் ஆதரவற்ற மூத்த குடிமக்களின் பாதுகாப்பிற்கு மற்றும் அவர்களின் அவசர தேவைக்கு உதவும் வகையில் அரியலூர் மாவட்ட காவல்துறை அலுவலத்தில் செயல்படுகின்ற கொரோனா கட்டுப்பாட்டு அறையில் 24×7 மணி நேரம் செயல்படுகின்ற ஹெல்ப் டெஸ்க் ஏற்படுத்தப்பட்டுள்ளது. உதவி எண்கள்: 04329-222216. இந்த எண்களைத் தொடர்பு கொள்வதன் மூலம் அரியலூர் மாவட்டத்தில் உள்ள மூத்த குடிமக்கள் காவல்துறையினரின் உதவியைப் பெறலாம்.
மூத்த குடிமக்களுக்கு தேவையான உதவிகளை துரிதமாக மேற்கொள்வதற்கு ஒவ்வொரு காவல் நிலையங்களிலும் 2 காவலர்கள் என சுழற்சி முறையில், மொத்தம் 16 காவல் நிலையங்களில் 32 காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.இவர்கள் உடனடியாக மூத்த குடிமக்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுப்பார்கள்.
மேலும் அரியலூர் மாவட்டத்தில் தளர்வுகள் அற்ற ஊரடங்கு பாதுகாப்பு பணியில் 750-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் உள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் 12 சோதனை சாவடிகள் மற்றும் 20 சோதனை மையங்களில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அனாவசியமாக ஊர் சுற்றுபவர்கள் மீது வழக்கு செய்ய பதிவு செய்யப்பட்டு அவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu