அரியலூர் மாவட்டத்தில் இன்று 14 பேருக்கு கொரோனா. ஒருவர் உயிரிழப்பு

அரியலூர் மாவட்டத்தில் இன்று 14 பேருக்கு கொரோனா. ஒருவர் உயிரிழப்பு
X

பைல் போட்டோ 

கொரோனா இன்று முன்தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்கள் 1339 பேர். இதில் முதல் தடுப்பூசியை 1037 பேர் போட்டுக் கொண்டுள்ளனர்.

அரியலூர் மாவட்டத்தில் இன்று கொரோனாவால் 14 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று ஒருவர் உயிரிழப்பு. இன்று குணமடைந்து வீடு திரும்பியர்வர்கள் 23 பேர். மருத்துமனைகளில் 180 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்றுவரை 16,217 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவில் இருந்து 15,793 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்றிற்கு இதுவரை 244 பேர் உயிரிழந்துள்ளனர்.

மருத்துவமனைகளில் இன்று எடுக்கப்பட்ட மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டவர்கள் 424 பேர். இதுவரை 2,77,071 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் நோய்தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் 16,217 பேர், நோய்தொற்று இல்லாதவர்கள் 2,60,854 பேர். அரியலூர் மாவட்டத்தில் இதுவரை நடத்தப்பட்ட சிறப்பு முகாம்கள் 11,485. இதில் பரிசோதனை செய்யப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை 5,61,668. அதில் மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டவர்கள் 35,939 பேர்.

முகாம்களில் நடத்தப்பட்ட பரிசோதனைனகளில் நோய்தொற்று உறுதிசெய்யப்பட்டவர்கள் 1,765 பேர். நோய்தொற்று இல்லாதவர்கள் 34,067 பேர். பரிசோதனை முடிவு வரவேண்டியவர்கள் 107 பேர். கொரோனா இன்று முன்தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்கள் 1339 பேர். இதில் முதல் தடுப்பூசியை இன்று 1037 பேர்போட்டுக் கொண்டுள் ளனர். 2ம் தடுப்பூசியை இன்று 302 பேர் போட்டுக்கொண்டுள்ளனர்.

Tags

Next Story
டெல்லி டூ அமெரிக்கா அரை மணி நேரத்துலயா? என்னப்பா சொல்ற எலான் மஸ்க்..! | Delhi to America Flight Timings