பள்ளிகளில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை: மாவட்ட கலெக்டர் ஆய்வு
![பள்ளிகளில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை: மாவட்ட கலெக்டர் ஆய்வு பள்ளிகளில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை: மாவட்ட கலெக்டர் ஆய்வு](https://www.nativenews.in/h-upload/2021/09/03/1278647-coll-444.webp)
அரியலூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளில் கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
அரியலூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளில் கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் செயல்படும் என அறிவித்ததைத் தொடர்ந்து, அரியலூர் மாவட்டத்திலுள்ள 9-12 வகுப்பு வரை உள்ள உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள், கல்லூரிகளில் அரசு தெரிவித்துள்ள நிலையான வழிக்காட்டு நெறிமுறைகளுடன் செயல்பட்டு வருகின்றன.
அதன் அடிப்படையில், 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை வகுப்பிற்கு 20 மாணவர்களுடன் 50 சதவீத மாணவர்களைக் கொண்டு வாரத்திற்கு 6 நாட்கள் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. மேலும், வகுப்பிற்கு வர விருப்பம் இல்லாத மாணவர்களுக்காக ஆன்லைன் மூலமாக பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகிறது. மேலும், வகுப்பிற்கு வருகை தரும் மாணவர்களுக்கு கொரோனா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, முககவசம் அணிந்தும், சமூக இடைவெளியுடனும் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. வகுப்பிற்கு வருகை தரும் மாணவர்களின் உடல்நிலை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாணவர்களுக்கு ஏதேனும் சளி, காய்ச்சல் உள்ளிட்டவைகள் ஏற்படும் பட்சத்தில் அவர்களை தனிமைப்படுத்தி அவர்களை கண்காணிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், பள்ளிக்கு வருகை தரும் அனைத்து ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, பள்ளிக்கு வருகை தரும் மாணவர்கள் அனைவரும் கொரோனா நோய்தொற்று குறித்து முழுமையாக தெரிந்துகொள்வதுடன், கொரோனா தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளும் வகையில் அரசு தெரிவித்துள்ள முககவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் மற்றும் சோப்பு போட்டு கைகளை கழுவுதல் போன்ற பழக்க வழக்கங்களை கடைபிடிக்க வேண்டும். மேலும், மாணர்வர்கள் அனைவரும் தங்களுக்கோ அல்லது குடும்ப உறுப்பினர்களுக்கோ சளி, காய்ச்சல் உள்ளிட்டவைகள் தென்படும் பொழுது, அவர்களை தனிமைப்படுத்தி, கொரோனா பரிசோதனை மேற்கொள்ளவும், 18-வயதிற்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டு தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி மாணவர்களிடம் அறிவுறுத்தினார்.
அதன்படி, பள்ளி, கல்லூரிகளில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தத்தனூர் மீனாட்சி ராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் வரதராஜன்பேட்டை அன்னை ஞானாம்பாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகளை ஆய்வு செய்தார். உடையார்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் வரதராஜன்பேட்டை டான்பாஸ்கோ மேல்நிலைப்பள்ளிகளில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகள் குறித்தும், அரியலூர் நிர்மலா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.
வகுப்பறைகளில் மாணவிகள் சமூக இடைவெளியில் அமரவும், தண்ணீர் மற்றும் உணவுப் பொருட்களை தங்களுக்குள் பரிமாரிக்கொள்வதை தவிர்க்கவும் ஆசிரியர்கள் மூலமாக மாணவிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது, வட்டாட்சியர்கள் முத்துகிருஷ்ணன் (ஆண்டிமடம்), ஆனந்தன் (ஜெயங்கொண்டம்), பேரூராட்சி செயல் அலுவலர் உஷா, வட்டார வளர்ச்சி அலுவலர் அருளப்பன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu