அரியலூர் மாவட்டத்தில் 27ம் தேதி 18 பேருக்கு கொரோனா, 2 பேர் உயிரிழப்பு

அரியலூர் மாவட்டத்தில் 27ம் தேதி 18 பேருக்கு கொரோனா, 2 பேர் உயிரிழப்பு
X

பைல் படம்

அரியலூர்மாவட்டத்தில் 27ம் தேதி 18 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. 2 பேர் சிகிச்சை பலன் இன்றி இறந்தனர்.

அரியலூர் மாவட்டத்தில் 27 தேதி மட்டும் கொரோனாவால் 18 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று 2 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று குணமடைந்து வீடுதிரும்பியர்வர்கள் 29 பேர். மருத்துமனைகளில் 229 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்றுவரை 15,683 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவில் இருந்து 15,220 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்றிற்கு இதுவரை 234 பேர் உயிரிழந்துள்ளனர்.

மருத்துவமனைகளில் இன்று எடுக்கப்பட்ட மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டவர்கள் 1328 பேர். இதுவரை 2,50,327 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் நோய்தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் 15,683 பேர், நோய்தொற்று இல்லாதவர்கள் 2,34,644 பேர்.

அரியலூர் மாவட்டத்தில் இதுவரை நடத்தப்பட்ட சிறப்பு முகாம்கள் 10,660. இதில் பரிசோதனை செய்யப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை 5,25,391.

அதில் மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டவர்கள் 33,018 பேர். முகாம்களில் நடத்தப்பட்ட பரிசோதனைனகளில் நோய்தொற்று உறுதிசெய்யப்பட்டவர்கள் 1,661 பேர். நோய்தொற்று இல்லாதவர்கள் 31,060 பேர். பரிசோதனை முடிவு வரவேண்டியவர்கள் 151 பேர்.

கொரோனா இன்று முன்தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்கள் 2387 பேர். இதில் முதல் தடுப்பூசியை இன்று 2187 பேர்போட்டுக்கொண்டுள்ளனர். 2ம் தடுப்பூசியை இன்று 200 பேர் போட்டுக்கொண்டுள்ளனர்.

Tags

Next Story
மக்களே உஷார் ....! மழைக்காலத்துல பல நோய்கள் வருதாம் !... அத எதிர்கொள்ள உங்களுக்காக சில டிப்ஸ்....