அரியலூரில் முன்னாள் ராணுவத்தினருக்கு வங்கி திட்டங்கள் பற்றிய ஆலோசனை கூட்டம்

அரியலூரில்  முன்னாள் ராணுவத்தினருக்கு வங்கி திட்டங்கள் பற்றிய ஆலோசனை கூட்டம்
X

அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி


அரியலூரில் முன்னாள் ராணுவத்தினருக்கான வங்கி திட்டங்கள் பற்றிய ஆலோசனை கூட்டம் வருகிற 22-ந்தேதி நடக்கிறது.

அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது

அரியலூர் மாவட்டத்தில் வங்கி சேமிப்பு கணக்கு வைத்துள்ள முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர்கள், ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் மற்றும் வங்கியினால் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து அறிந்து கொள்ள ஆலோசனை கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வருகின்ற 22ம்தேதி அன்று மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாலை 03.30 மணிக்கு, மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெறும் வங்கி கூட்டத்தில் வங்கி அதிகாரிகள் திட்டங்கள் குறித்து விளக்கவுரை அளிக்கின்றனர்.

எனவே முன்னாள் படைவீரர்கள், ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்