பெட்ரோல், கேஸ் விலை உயர்வை கண்டித்து மகிளா காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், கேஸ் விலை உயர்வை கண்டித்து மகிளா காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
X

அரியலூர் - பெட்ரோல் கேஸ் விலை உயர்வை கண்டித்து மகிளா காங்கிரஸ் சார்பில், காலி சிலிண்டருக்கு மாலை அணிவித்து நூதன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 


பெட்ரோல், கேஸ் விலை உயர்வை கண்டித்து மகிளா காங்கிரஸ் சார்பில், அரியலூரில் ஆர்ப்பாட்ட்டம் நடைபெற்றது.

அரியலூர் மகிளா காங்கிரஸ் கட்சி சார்பில், மத்திய அரசைக் கண்டித்து மாவட்ட தலைவி மாரியம்மாள் தலைமையில், அண்ணாசிலை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், ஏழைகளை பாதிக்கும் வகையில் பெட்ரோல், டீசல் மற்றும் சிலிண்டர் விலையை கடுமையாக மத்திய அரசு உயர்த்தி உள்ளது அத்தியாவசிய உணவுப் பொருட்கள் உள்ளிட்ட பொருட்களின் விலையும் அதிகரிக்கும். எனவே, மத்திய அரசு, பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் சிலிண்டர் விலையை குறைக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில், காலி சிலிண்டருக்கு மாலை அணிவித்து அதனை சுற்றி வந்து பெண்கள் மார்பில் அடித்துக் கொண்டு அழுதும் விலை உயர்வால் சிலிண்டர் வாங்க முடியாததால் பொதுமக்களிடம் யாசகம் கேட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

Tags

Next Story