வாக்காளர் எண்ணுடன் ஆதார்அடையாள அட்டை இணைத்துக்கொள்ள கலெக்டர் அறிவிப்பு
பைல் படம்.
அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி விடுத்துள்ள செய்திகுறிப்பில், இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள வாக்காளர்கள் தொடர்பான விவரங்களை உறுதி செய்வதற்காகவும், ஒரே வாக்காளரின் பெயர், ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதியில் (அல்லது) ஒரே தொகுதியில், ஒன்றுக்கு மேற்பட்ட எண்ணிக்கையில் இடம் பெற்றுள்ளதா என்பதை கண்டறிவதற்காகவும், நாடு முழுவதும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணினை இணைக்க அனுமதி வழங்கியதன் அடிப்படையில் அப்பணி 01.08.2022 முதல் நடைபெற்று வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் ஒரு பகுதியாக ஒவ்வொரு மாவட்டத்திலும் தங்களது ஆதார் எண்ணினைதாமாகவே முன்வந்து இணையவழியில் வாக்காளர் எண்ணுடன் தங்களது ஆதார் அடையாள அட்டையுடன் இணைத்திடும் முதல் 1000 வாக்காளர்களுக்கு இந்திய தேர்தல் ஆணையத்தின் ந-சான்றிதழ் வழங்கப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இச்சான்றிதழை பெற்றிட கீழ்கண்ட நடைமுறையினை பின்பற்றிட வேண்டும்.
கீழ்கண்ட ஏதேனும் ஒரு செயலியினை பயன்படுத்தி வாக்காளர்கள் தங்களது ஆதார் எண்ணிணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்திட வேண்டும்.
நேஷனல் வோட்டர்ஸ் சர்வீஸ் போர்ட்டல் (NVSP) (https://www.nvsp.in)
வோட்டர்ஸ் ஹெல்ப்லைன் ஆப் (VHA) (https://play.google.com/store/apps/details?id=com.eci.citizen&hl=en)
வோட்டர்ஸ் போர்ட்டல் (https://voterportal.eci.gov.in) வெற்றிகரமாக ஆதார் எண்ணினை இணைத்த பின்பு அதற்கு வழங்கப்படும் குறியீட்டெண்ணினை தனியாக குறித்து வைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் https://elections.tn.gov.in/getacertificate என்ற இணையதளத்தின் முகவரிக்கு சென்று உங்களது மொபைல் எண்ணிணையும் OTP எண்ணிணையும், ஏற்கனவே குறித்து வைத்துக் கொண்டுள்ள குறியீட்டெண்ணையும் உள்ளீடு (submit)செய்தால் சான்றிதழ் கிடைக்கும்.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள வாக்காளர்கள் தங்களது ஆதார் எண்ணிணை வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையுடன் மேற்குறிப்பிட்ட வழிமுறைகளை பின்பற்றி இணைத்து "இ"சான்றிதழ்களை தரவியங்கம் செய்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான சிறப்புமுகாம் 04.09.2022 ஞாயிறு அன்று அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் நடைபெற உள்ளதால், வாக்காளர்கள் தங்களது ஆதார், வாக்காளர் அடையாள அட்டைஎண் விவரங்களை படிவம்-6B-யில் சமர்ப்பித்து வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ளலாம் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu