தொழில் முனைவோர் மேம்பாடு திட்டம் சார்பில் கிளஸ்டர் விழிப்புணர்வு நிகழ்ச்சி

தொழில் முனைவோர் மேம்பாடு திட்டம் சார்பில் கிளஸ்டர் விழிப்புணர்வு நிகழ்ச்சி
X

அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்ட ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகளுக்கான கிளஸ்டர் விழிப்புணர்வு நிகழ்ச்சி

அரியலூர் மாவட்ட தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் தொண்டு நிறுவனம் சார்பில் கிளஸ்டர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது

அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்ட ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகளுக்கான கிளஸ்டர் விழிப்புணர்வு நிகழ்ச்சி தனியார் ஹோட்டலில் நடைபெற்றது.

இதில், சிறு குறு மற்றும் நடுத்தர தொழிலில் தொழிலை உற்பத்தி மற்றும் சேவையாக பிரிக்கப்பட்டுள்ளது. தற்போது ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகள் சேவையில் வருவதால் அரசாங்கம் ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகள் நடத்துபவர்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்தத் திட்டமானது தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஓட்டுனர் பயிற்சி பள்ளி நடத்துபவர்கள் பொதுவான வளர்ச்சி மையத்தை உருவாக்கி பயன்பெறலாம்.

பொதுவான வளர்ச்சி மையத்தை சிறு தொழில் வளர்ச்சி நிறுவனம் அமைந்துள்ள இடங்களில் தொடங்க முன்னுரிமை அளிக்கப்படும் என சிறு தொழில் வளர்ச்சி நிறுவனம் திருச்சி மண்டல அலுவலர் பிரான்சிஸ் நோயல் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில், எஸ்எம்இ துணை இயக்குநர் தயாளன், அரியலூர் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் லஷ்மி, மாவட்ட தொழில் மைய கூடுதல் நிர்வாக பொறியாளர் ஜனனி, இடிஐஐ பயிற்சி ஒருங்கிணைப்பாளர் டான்போஸ்கோ மற்றும் அரியலூர், பெரம்பலூர் மாவட்ட ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story