10 வகுப்பு தேர்ச்சி விகிதம்: மாநில அளவில் அரியலூர் மாவட்டம் 13வது இடம்

பைல் படம்.
இதுகுறித்து அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:
நடந்து முடிந்த மே 2022 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வினை 173 பள்ளிகளைச் சேர்ந்த 10230 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 5237 மாணவர்களும், 4993 மாணவிகளும் தேர்வு எழுதினர். மாவட்டத்தின் மொத்த தேர்ச்சி சதவீதம் 91.66 ஆகும். 115 அரசு பள்ளிகளில் 3188 மாணவர்களும், 2826 மாணவிகளும் ஆக மொத்தம் 6014 மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில் 2631 மாணவர்களும், 2609 மாணவிகளும் ஆக மொத்தம் 5240 தேர்ச்சி பெற்றனர். அரசுப்பள்ளி தேர்ச்சி சதவீதம் 87.13 ஆகும்.
15 அரசு உதவிபெறும் உயர், மேல்நிலைப்பள்ளிகளில் பயின்ற 869 மாணவர்களும், 1313 மாணவிகளும் ஆக மொத்தம் 2182 பேர் தேர்வு எழுதினர். இதில் 828 மாணவர்களும், 1301 மாணவிகளும் தேர்ச்சி பெற்றனர். அரசு உதவிபெறும் பள்ளிகள் தேர்ச்சி சதவீதம் 97.57 ஆகும்.
3 அரசு ஆதிதிராவிட நல உயர், மேல்நிலைப்பள்ளிகளில் பயின்ற 49 மாணவர்களும், 40 மாணவிகளும் ஆக மொத்தம் 89 பேர் தேர்வு எழுதினர். இதில் 36 மாணவர்களும், 36 மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 80.90 ஆகும். 24 மெட்ரிக் உயர், மேல்நிலைப்பள்ளிகளில் பயின்ற 890 மாணவர்களும், 683 மாணவிகளும் ஆக மொத்தம் 1573 பேர் தேர்வு எழுதினர். இதில் 889 மாணவர்களும், 683 மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 99.94 ஆகும்.
16 சுயநிதி உயர், மேல்நிலைப்பள்ளிகளில் பயின்ற 241 மாணவர்களும், 131 மாணவிகளும் ஆக மொத்தம் 372 பேர் தேர்வு எழுதினர். இதில் 235 மாணவர்களும், 129 மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 97.85 ஆகும். மேலும் தேர்ச்சி பெற்ற பள்ளிகளில் அரசுப்பள்ளி - 20, அரசு ஆதி திராவிடர் நலப்பள்ளி - 1, அரசு உதவிபெறும் பள்ளி - 4, மெட்ரிக் பள்ளி - 23, சுயநிதி பள்ளி - 11 ஆக மொத்தம் 59 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.
தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன் என மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu