த.சோழன்குறிச்சி ஊராட்சி செயலர் ரவி தற்காலிக பணி நீக்கம்

த.சோழன்குறிச்சி ஊராட்சி செயலர் ரவி தற்காலிக பணி நீக்கம்
X

மே 1 ம் தேதி நடைபெற்ற கிராம சபை கூட்டம்.

கிராம சபை கூட்டம் அரசு விதிமுறைகளை பின்பற்றாத காரணத்தினால் த.சோழன்குறிச்சி ஊராட்சி செயலர் ரவி தற்காலிக பணி நீக்கம்.

இதுகுறித்து அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியம், த.சோழன்குறிச்சி ஊராட்சியில் 01.05.2022 தொழிலாளர் தினத்தன்று நடைபெற்ற கிராம சபை கூட்டம் அரசு விதிமுறைகளை பின்பற்றி முறையாக நடத்தாத காரணத்தினால் அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி அறிவுரையின்படி த.சோழன்குறிச்சி ஊராட்சி செயலர் எம்.ரவி என்பவர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!