மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் நான்: முதல்வர் பழனிச்சாமி

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் நான்: முதல்வர் பழனிச்சாமி
X
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் நான் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி முக ஸ்டாலினுக்கு பதிலடி

அரியலூர் சட்டமன்ற தொகுதியிள் போட்டியிடும் அதிமுக வேட்பாளரும், அரசு கொறடா வுமான தாமரை ராஜேந்திரன் ஆதரித்து இரட்டை இலைக்கு வாக்குகள் சேகரித்தார் எடப்பாடி பழனிச்சாமி. பேருந்து நிலையம் அருகே எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர் பேசுகையில், இங்கு கூடியிருக்கும் கூட்டத்தை பார்க்கும் பொழுது இது அதிமுக தேர்தல் பிரச்சாரம் அல்ல, மாநாடு போல் தோன்றுகிறது. இதற்கு காரணம் அதிமுக அரசு கடந்த 5 ஆண்டுகளில் செய்த சாதனைகள்தான். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் செல்லும் இடங்களில் எல்லாம் அதிமுக அரசை குறை சொல்லி பேசி வருகிறார். நான் ஊர்ந்து வந்து முதலமைச்சர் ஆனேன் என்று கூறி வருகிறார். நானென்ன பாம்பா? பள்ளியா? மக்களின் ஆதரவால் முதலமைச்சர் ஆனேன் என்று கூறினர்.

மேலும் வாரிசு அரசியலை நடத்தி வருபவர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் கலைஞர் ஸ்டாலின் உதயநிதி அடுத்தது அவர் மகன் இன்று குடும்ப அரசியலை நடத்தி வருகிறார். ஆனால் அதிமுக கட்சியில் அடிமட்ட தொண்டன் முதலமைச்சர் ஆகலாம் என்பதற்கு நானே உதாரணம். இதுபோன்று அதிமுக அரசை ஊழல் அரசு என்று குறை கூறுகிறார். ஆனால் காற்றிலே கூட ஊழல் செய்த திமுக தலைவர் மு க ஸ்டாலின் ஆட்சி காலத்தில் இருந்த அமைச்சர்கள் மீது வழக்குகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. அந்த வழக்குகளின் அடிப்படையில் திமுக கட்சியில் உள்ள மூத்த தலைவர்களை சிறைக்கு அனுப்பிவிட்டு தனது வாரிசான உதயநிதி ஸ்டாலின் எந்த பிரச்சனையும் இன்றி தலைவராக ஸ்டாலின் தான் தனது மகனுக்கு ரூட் போட்டுக் கொண்டிருக்கிறார்.

தேர்தல் பிரச்சாரம் செய்து பொதுமக்களை சந்தித்து மனுக்களை பெற்றார். மு.க.ஸ்டாலின் அந்த மனுக்களை என்ன செய்தார் என்பதே தெரியாது. தற்பொழுது மீண்டும் மனுக்களை வாங்கி பெட்டியில் பூட்டி வைத்து வருகிறார். ஆனால் அதிமுக அரசு நவீனமாகி வருகிறது. முதலமைச்சர் குறை தீர்க்கும் பிரிவு என்று நவீனமாக செல்போனில் அழைத்தவுடன் குறைகளைத் தீர்க்கும் அரசாக அதிமுக அரசு உள்ளது. இதன் மூலம் பொதுமக்களின் குறைகளை தீர்க்கப்பட்டு இனிமேல் மனுக்களுக்கு வேலையில்லை என்ற நிலைமையே அரசால் உருவாகியுள்ளது.

மரியாதை தெரியாமல் திமிர்த்தனமாக அதிகார போதையில் ஒரு முதலமைச்சருக்கு கூட மரியாதை கொடுக்காமல் அநாகரிகமாக பேசிவருகிறார் மு க ஸ்டாலின், இதுதான் அவர் பாணி. ஆனால் நமது கட்சிகளும் சரி கூட்டணி கட்சியினர் தலைவர்களும் சரி அனைவரையும் மரியாதையுடன் பேசுபவர்கள் நடத்துபவர்கள். இதுதான் அந்த கூட்டணிக்கும் நமக்கும் உள்ள வேறுபாடு.

மக்களின் மனதைக் குழப்பி செய்ய முடியாத திட்டங்களை கூறி உங்களை ஏமாற்றி வருபவர் முக ஸ்டாலின். ஆனால் அதிமுக அரசு சொன்னதை செய்து வருகிறது. தற்பொழுது தேர்தல் அறிக்கையில் மகளிர் சுய உதவி குழு கடன் தள்ளுபடி, விவசாய கடன் தள்ளுபடி, பெண்களுக்கு ஆண்டுக்கு ஆறு சிலிண்டர்கள், வீட்டிற்கு ஒரு வாஷிங் மெஷின், ஏப்ரல் 1ம் தேதி முதல் 24 மணி நேர மும்முனை மின்சாரம், ரேஷன் பொருட்கள் வீடு வந்து சேரும் என்ற பல நல்ல திட்டங்களை வாக்குறுதிகளாக அளித்துள்ளோம்.

மு க ஸ்டாலின் தமிழக அரசு எந்த திட்டத்தையும் செயல்படுத்த வில்லை என்கிறார். ஆனால் அரியலூர் மாவட்டத்தில் 340 கோடியில் மருத்துவக்கல்லூரி, மருதை ஆற்றில் தடுப்பணை உள்ளிட்ட 1000 கோடி மதிப்பிலான நலத் திட்டங்களை செயல்படுத்தி உள்ளது. ஒரு மாவட்டத்திற்கு இவ்வளவு என்றால் ஒரு மாநிலத்தில் எவ்வளவு கோடிக்கு நலத்திட்டங்கள் செய்துள்ளோம். எனவே மக்கள் நிம்மதியாக வாழ கட்டப்பஞ்சாயத்து ரவுடிகள் தொந்தரவு இல்லாமல் அமைதியாக மக்கள் நிம்மதியாக வாழ்க்கை நடத்தி வர அதிமுக அரசுக்கு தொடர்ந்து வாக்களிக்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பொதுமக்களிடம் உரையாற்றினார்.

அதிமுக வேட்பாளராக ராஜேந்திரனுக்கு ஆதரவாக வாக்குகள் சேகரித்தபோது கூட்டணி கட்சி பிரமுகர்கள், திரளான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story