அரியலூர் மாவட்டத்தில் கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசி சிறப்பு முகாம்

அரியலூர் மாவட்டத்தில் கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசி சிறப்பு முகாம்
X
கோழிக் கழிச்சல் நோயக்கு பொதுமக்கள் தங்களது கோழிகளுக்கு தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஆட்சியர் பெ.ரமணசரஸ்வதி அறிவிப்பு.

அரியலூர் மாவட்டத்தில், கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் இரு வாரம் நடைபெறவுள்ள கோழிக் கழிச்சல் நோயக்கு தடுப்பூசி செலுத்தும் முகாமில், பொதுமக்கள் தங்களது கோழிகளுக்கு தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு ஆட்சியர் பெ.ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளார்.

அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி விடுத்துள்ள செய்திகுறிப்பில், கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் ஆண்டுதோறும் பிப்ரவரி மாதத்தில் கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசி இருவார சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகின்றது.

நிகழாண்டு 01.02.2022 முதல் 14.02.2022 வரை இரு வாரங்கள் கோழிகளுக்கான "கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசிப்பணி சிறப்பு முகாம்" அரியலூர் மாவட்டத்தில் அனைத்து கிராமங்களிலும் நடைபெற உள்ளது.

இம்முகாமில் 8 வாரம் மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து கோழிகளுக்கும் இந்த தடுப்பூசி மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே, அனைத்து கோழிவளர்ப்போர் மற்றும் விவசாயிகள் இம்முகாமில் கலந்து கொண்டு தங்கள் கோழிகளுக்கு தடுப்பூசி செலுத்திக் கொண்டு பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு