திருக்குறள் முற்றோதல் செய்த மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்

திருக்குறள் முற்றோதல் செய்த மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்
X

திருக்குறள் முற்றோதல் செய்த மாணவ, மாணவிகளுக்கு அரியலூர் கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி, பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.


திருக்குறள் முற்றோதல் செய்த மாணவ, மாணவிகளுக்கு அரியலூர் கலெக்டர் பரிசுத்தொகைபாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.

அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில், தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் நடத்தப்பட்ட திருக்குறள் முற்றோதல் (ஒப்புவித்தல்) செய்த மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி, பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.

தமிழ் வளர்ச்சித் துறையால் நடத்தப்படும் திருக்குறள் முற்றோதல் செய்யும் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு குறள் பரிசு ரூ.10,000 வீதம் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அரியலூர் மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் 1330 குறட்பாக்களையும் முற்றோதல் செய்து பரிசுக்கு தெரிவு செய்யப்பட்ட 9 மாணவர்களுக்கு குறள் பரிசுத் தொகை தலா ரூ.10,000 மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

இதன்படி, 1330 குறட்பாக்களையும் முற்றோதல் செய்து குறள் பரிசு பெற்ற விழுப்பனங்குறிச்சி அறிஞர் அண்ணா மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 9ஆம் வகுப்பு பயிலும் மாணவன் கொ.பாலமுருகன், 11ஆம் வகுப்பு பயிலும் மாணவிகள் கீ.லிங்கமாயா மற்றும் கொ.நந்தினி, 8ஆம் வகுப்பு பயிலும் மாணவிகள் சி.சாதனா, அ.சமீரா மற்றும் இரா.அபிஷா, பெரியாகுறிச்சி அரசு உயர்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 8ஆம் வகுப்பு பயிலும் மாணவி சி.சுடர்விழி, க.பொய்யூர் சாத்தமங்கலம் அகில பாரதி மெட்ரிகுலேசன் பள்ளியைச் சேர்ந்த 6ஆம் வகுப்பு பயிலும் மாணவன் ம.கபிலேஷ், தத்தனூர் மீனாட்சி இராமசாமி மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 7ஆம் வகுப்பு பயிலும் மாணவன் க.பூங்குன்றன் என மேற்கண்ட 9 மாணவ, மாணவியர்களுக்கு குறள் பரிசுத் தொகை தலா ரூ.10,000, பாராட்டு சான்றிதழ் மற்றும் அரசாணை நகல் ஆகியவை வழங்கி, பரிசுப்பெற்ற மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்துகளை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் (பொ) க.சித்ரா மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai in future agriculture