அரியலூர் போட்டோ, வீடியோ கிராபர்ஸ் நலச்சங்க புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு

அரியலூர் போட்டோ, வீடியோ கிராபர்ஸ் நலச்சங்க புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு
X

அரியலூர் மாவட்ட போட்டோ, வீடியோ கிராபர்ஸ் நலசங்க புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா நடைபெற்றது.

அரியலூர் மாவட்ட போட்டோ வீடியோகிராபர்ஸ் நலச்சங்க நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

அரியலூர் மாவட்ட போட்டோ வீடியோகிராபர்ஸ் நலச்சங்க பதவி ஏற்பு விழா அரியலூர் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு அரியலூர் மூத்த புகைப்பட கலைஞர் இளங்கோவன் தலைமை தாங்கினார். சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். அரியலூர் மாவட்ட அமைப்பாளர் இரா.கர்ணன் அனைவரையும் வரவேற்றார்.

இதில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு போட்டோ வீடியோகிராபர் மாநில தலைவர் சிவகுமார், மாநில பொருளாளர் சுரேஷ், மாநில அமைப்பாளர் சிவக்குமார், முன்னாள் மாநிலத் தலைவர் பத்மநாபன்,துணைத்தலைவர் ஹக்கிம் துணை தலைவர் சரவணன், மாநில இணைச் செயலாளர் பொன்னுசாமி, மாநில இணைச்செயலாளர் அசோக் ஆகியோர் கலந்துகொண்டனர்

அரியலூர் மாவட்ட தலைவராக எஸ் மோகன், செயலாளராக ஆர். கண்ணன், பொருளாளராக ஆர். கொளஞ்சி, அமைப்பாளராக இரா. கர்ணன் ஆகியோர் புதிய நிர்வாகிகளாக பதவி ஏற்றுக்கொண்டனர். மாவட்ட உறுப்பினர்கள் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story