அரியலூர் அருகே நெல் இருப்பு மையத்திற்குள், லாரிகள் செல்ல முடியாமல் தவிப்பு

அரியலூர் அருகே நெல் இருப்பு மையத்திற்குள், லாரிகள் செல்ல முடியாமல் தவிப்பு
X

அரியலூர் அருகே நெல் இருப்பு மையத்தின் உள்ளே செல்லமுடியாத நிலையில் சாலைகள் உள்ளதால் அவதிப்படும் லாரி ஓட்டுனர்கள்

அரியலூர் அருகே நெல் இருப்பு மையத்திற்குள் லாரிகள் செல்ல முடியாத நிலையில் 20 லாரிகள் சாலையில் நிற்கின்றன.
அரியலூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பெய்துவரும் மழையால், அயன்சுத்தமல்லி கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலி நெல்மூட்டைகள் இருப்பு மையத்திற்கு செல்லும் சாலைவசதி குறைபாட்டால், நெல்மூட்டைகள் இறக்கப்படாமல் லாரிகளிலேயே காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் திருமானூர், தா.பழூர் ஆகிய இருஒன்றியங்கள் டெல்டா பகுதி ஆகும். இப்பகுதியில் விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்ய 15-க்கும் மேற்பட்ட அரசு நெல்கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது.

கொள்முதல் செய்யபட்ட நெல் மூட்டைகள் அறவை பணிக்காக திருச்சி கொண்டு செல்வது வழக்கம். விவசாயிகளிடம் இருந்து கூடுதலாக நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டு வருவதால், தற்காலிகமாக அரியலூர் மாவட்டம் அயன்சுத்தமல்லி கிராமத்தில் நெல்மூட்டைகள் இருப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மையத்திற்கு நெல்மூட்டைகள் கொண்டுவரப்பட்டு பின்னர் படிப்படியாக திருச்சியில் உள்ள நவீனஅரசி ஆலைக்கு அனுப்பப்படுகிறது.

இந்நிலையில் கடந்த இருநாட்களாக அரியலூர் மாவட்டத்தில் பெய்யும் மழையால் அயன்சுத்தமல்லி நெல் இருப்பு மையத்தின் உள்ளே லாரிகள் செல்லும் சாலை சேறுசகதியாக மாறியுள்ளது.

இச்சாலையில் சென்றால் லாரியின் டயர் மண்ணில் சிக்கி கொள்ளும் என்பதால், நெல்மூட்டைகளுடன் வந்த இருபதுக்கும் மேற்பட்ட லாரிகள் கீழப்பழுவூர் அருகே தனியார் எடைமேடை அருகே நிறுத்தி வைக்கபட்டுள்ளது.

இதனால் கடந்த இருநாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் லாரி ஓட்டுனர்கள் அங்கேயே காத்திருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

சாலைசரியாகி இருப்பு மையத்திற்கு செல்ல மூன்று நாட்கள் ஆகும் என்பதால் தங்களுடைய நாள் வாடகையும், தினப்படியும் பணம் வீனாவதாக வேதனை தெரிவித்தனர்.

மழை காலத்தில் இப்பிரச்சினை தொடராமல் இருக்க நெல் இருப்பு மையத்தை மாற்றவேண்டும், அல்லது நிரந்தர சாலைவசதியை செய்யவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!