கிராமசபை கூட்டத்தில் அரியலூர் எம்.எல்.ஏ. சின்னப்பா பங்கேற்பு

கிராமசபை கூட்டத்தில் அரியலூர் எம்.எல்.ஏ. சின்னப்பா பங்கேற்பு
X

வாரணவாசியில் நடந்த கிராமசபை கூட்டத்தில் சின்னப்பா எம்.எல்.ஏ. பங்கேற்றார்.

வாரணவாசி சிறப்பு கிராமசபை கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக அரியலூர் எம்எல்ஏ சின்னப்பா கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியம் வாரணவாசியில் இன்று சிறப்பு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் இராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு சின்னப்பா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

இக்கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், சுகாதாரம் (பள்ளி கழிப்பறைகள் மற்றும் அங்கன்வாடி மையக் கழிப்பறைகள்), ஊராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப் பணிகளின் முன்னேற்றம் மற்றும் நிதி செலவின விபரங்கள் குறித்து விவாதித்தல். மக்கள் திட்டமிடல் இயக்கம். ஊட்டச்சத்து இயக்கம். பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி தடை செய்தல், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), விரிவான கிராம சுகாதார திட்டத்தைப் பற்றி விவாதித்தல், ஜல் ஜீவன் திட்டம், வேளாண்மை - உழவர் நலத்துறை, நமக்கு நாமே திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் ஆகிய பொருள்கள் விவாதிக்கப்பட்டது.

உடன் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜாகிர் உசேன், ரமேஷ், வேளாண்மைத் துறை ராஜா, கால்நடை துறை செந்தில்குமார், வட்ட வழங்கல் அலுவலர் பாலசுப்ரமணியம், துணைத்தலைவர் ரேவதி, ஒன்றிய கவுன்சிலர் சபிதா, ஊராட்சி செயலாளர் மற்றும் அரியலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் பி.சங்கர் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது