அரியலூர்: கொட்டி தீர்த்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி

அரியலூர்: கொட்டி தீர்த்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி
X
அரியலூர் மாவட்டத்தில் கொட்டி தீர்த்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

அரியலூர் மாவட்டத்தில் கடந்த ஒருமாதமாக கடுமையான வெயில் வாட்டி வதைத்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக அரியலூர், செந்துறை, ஜெயங்கொண்டம், உடையார்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது. சில இடங்களில் கனமழை பெய்தது.

இதனால் வெப்பத்தின் தாக்கம் சற்று குறைந்து குளிர்ச்சியாக சீதோஷ்ண நிலை நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும் மானாவாரி பயிர்களுக்கு இந்த மழை மிகவும் பயன்அளிக்கும் என்பதாலும், நெல்சாகுபடி பணியை தொடங்க இம்மழை பெரிதும் உதவும் என்பதாலும் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

அரியலூர் நகரில் நேற்று இரவு நல்லமழை பெய்தது. 25.3மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. திருமானூரில் 1.4மில்லிமீட்டர், ஜெயங்கொண்டத்தில் 5மில்லிமீட்டர், செந்துறையில் 17மில்லிமீட்டர், ஆண்டிமடத்தில் 2மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil