அரியலூர் அரசு மருத்துவ கல்லூரி முன் அரசு மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம்

அரியலூர் அரசு மருத்துவ கல்லூரி முன் அரசு மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம்
X

அரியலூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனை  முன்பாக தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


அரியலூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனை முன்பு தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

அரியலூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனை புறநோய்கள் பிரிவு முன்பாக தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரசு மருத்துவர்கள் சங்கத்தலைவர் கொளஞ்சிநாதன் தலைமையில் மருத்துவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் பணி நேரத்தை நீட்டிக்கும் அரசாணை 225 திரும்பபெற வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும் இரவு நேரங்களிலும் அறிக்கைகள் கேட்கும் போக்கினை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் திரளான மருத்துவர்கள் பங்கேற்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!