சிறப்பாக பணிபுரிந்த காவல்துறையினருக்கு அரியலூர் மாவட்ட எஸ்.பி.பாராட்டு

சிறப்பாக பணிபுரிந்த காவல்துறையினருக்கு அரியலூர் மாவட்ட எஸ்.பி.பாராட்டு
X
சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு அரியலூர் எஸ்.பி. பெரோஸ்கான் அப்துல்லா பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
அரியலூர் மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல்துறையினருக்கு காவல் கண்காணிப்பாளர் பாராட்டு தெரிவித்தார்.

அரியலூர் மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வரப்பெற்ற 112 புகார்களில் 100 புகார்களை உடனுக்குடன் சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு தகவல் கொடுத்து உரிய நேரத்தில் பொது மக்களின் புகார்களை சரிசெய்து நடவடிக்கை எடுக்க உதவியும், மாநில அளவில் அரியலூர் மாவட்டம் (100 call) முதலிடம் பிடித்து மெச்சத் தகுந்த பணி செய்தமைக்காகவும், காவல் கட்டுப்பாட்டு அறையில் பணிபுரிந்த 2 உதவி ஆய்வாளர் 2 முதல் நிலை காவலர் 4 காவலர்கள் என எட்டு நபர்களுக்கு வெகுமதி அளித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டினார்.

இதனை தொடர்ந்து அரியலூர் மாவட்டத்திலுள்ள விக்கிரமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வி.கைகாட்டி புறக்காவல் நிலையத்தில் 19.04.2022 ஆம் தேதி அன்று அப்பகுதியில் உடல் நிலை சரியில்லாமல் வெயிலின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டிருந்த 75 வயது மதிக்கத்தக்க வேல்முருகன் என்ற முதியவரை மீட்டு அவர்களது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். விசாரணை செய்ததில் இவர் ஒருவார காலமாக காணமல் போனது தெரியவந்ததுள்ளது. இவ்வாறு காணாமல் போன நபரை அவரது குடும்பத்தினருடன் சேர்த்து வைத்து மெச்சத் தகுந்த பணி செய்தமைக்காக விக்கிரமங்கலம் காவல் நிலைய காவலர் திருமுருகனுக்கு வெகுமதி வழங்கி பாராட்டினார்.

செந்துறை காவல் நிலைய குற்ற வழக்கில் தலைமறைவாக வைக்கப்பட்டிருந்த குற்றவாளியின் லாரியை சி.சி.டி.வி. உதவியுடன் குறுகிய காலத்தில் கண்டுபிடித்து வாகனத்தை பறிமுதல் செய்து மெச்சத் தகுந்த பணி செய்தமைக்காக செந்துறை காவல் நிலைய காவல் ஆய்வாளர் அன்பழகன், காவலர் செந்தில் முருகன் பணியை மெச்சும் விதமாகவும்,

அரியலூர் காவல் நிலைய சரகத்தில் 17.04.2022ம் தேதி அன்று ரோந்து பணியில் இருந்தபோது அண்ணாசிலை அருகே வெயிலின் தாக்கத்தால் சாலையில் மயங்கிய நிலையில் இருந்த 50 வயது மதிக்கத்தக்க மாற்றுத்திறனாளியான முத்து என்பவரை மீட்டு முதலுதவி அளித்து தண்ணீர் மற்றும் குளிர்பானங்கள் வழங்கி அவரது உறவினர்களை வரவழைத்து அவர்களிடம் ஒப்படைத்தார். இவரை அவரது குடும்பத்தினருடன் சேர்ந்த அரியலூர் காவல் நிலைய காவலர் தீபன்ராஜ் அவர்களின் பணியை மெச்சும் விதமாகவும், அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா வெகுமதி அளித்து பாராட்டினார்.

Tags

Next Story
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் : தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை-  நிறுவனங்களுக்கு அறிவுரை