ராஜன் கோப்பை தேர்வை அரியலூர் மாவட்ட கிரிக்கெட் வீரர்கள் புறக்கணிப்பு

ராஜன் கோப்பை தேர்வை அரியலூர் மாவட்ட கிரிக்கெட் வீரர்கள் புறக்கணிப்பு
X

மாநில அளவில் நடைபெறவுள்ள எஸ்.எஸ்.ராஜன் கிரிக்கெட் கோப்பைக்கான தேர்வை புறக்கணிப்பு செய்து வெளியேறிய அரியலூர் மாவட்ட வீரர்கள்.


மாநில அளவில் நடைபெறவுள்ள ராஜன் கிரிக்கெட் கோப்பைக்கான தேர்வை அரியலூர் மாவட்ட வீரர்கள் புறக்கணித்தனர்.

அரியலூர் மாவட்டம் செந்துறை அடுத்த தளவாய் கிராமத்தில் உள்ள தனியார் சிமென்ட் ஆலையில், மாநில அளவிலான எஸ்.எஸ்.ராஜன் கோப்பைக்கான அரியலூர் மாவட்ட கிரிக்கெட் அணி வீரர்களுக்கான தேர்வு மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் நடைப்பெற்றது.

அப்போது, அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிரிக்கெட் விளையாட்டு அணி வீரர்களும், அரியலூர் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தில் உள்ள நிர்வாகிகள் அனைவரும் வெளி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். மேலும், முறையாக தேர்தல் நடத்தி சங்க நிர்வாகிகள் தேர்ந்தெடுக்காமல், முறைகேடு செய்து சங்க நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என குற்றம்சாட்டி கிரிக்கெட் அணி தேர்வை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.

அப்போது, அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்களை கொண்டு முறையாக தேர்தல் நடத்தி, மாவட்ட கிரிக்கெட் சங்கத்துக்கு அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த புதிய நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். தொடர்ந்து கோரிக்கை அடங்கிய மனுவை தற்போதுள்ள மாவட்ட கிரிக்கெட் சங்க தலைவர் வசம் கொடுத்து விட்டு கலைந்து சென்றனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!