அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் கூட்டம் மாவட்ட கலெக்டர் அறிவிப்பு

அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் கூட்டம் மாவட்ட கலெக்டர் அறிவிப்பு
X

பைல் படம்.

நாளை அரியலூர் மாவட்ட பொது விநியோகத் திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சம்பந்தமான பொது மக்கள் குறைதீர் கூட்டம்.

இதுகுறித்து அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:

அரியலூர் மாவட்டத்தில் பொதுவிநியோகத் திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சம்பந்தமான பொது மக்கள் குறைதீர் கூட்டம், நாளை 14.05.2022 காலை 10.00 மணி முதல் 01.00 மணி முதல் கீழ்க்கண்ட கிராமங்களில் நடைபெற உள்ளது.

அரியலூர் வட்டத்தில் நாகமங்கலம் கிராமத்திலும், உடையார்பாளையம் வட்டத்தில் மணகெதி கிராமத்திலும், செந்துறை வட்டத்தில் சிறுகளத்தூர் கிராமத்திலும் மற்றும் ஆண்டிமடம் வட்டத்தில் சிலம்பூர் (வடக்கு) கிராமத்திலும் நடைபெறவுள்ளது.

மேற்கண்ட கூட்டத்தினை, சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்கள் முன்னின்று நடத்துவார்கள். அக்கூட்டத்தில், கூட்டுறவுத் துறையைச் சார்ந்த அலுவலர்கள் கலந்துகொள்வார்கள். மேலும், அக்கூட்டம் நடத்தப்படுவதை மேற்பார்வை செய்திட ஒவ்வொரு வட்டத்திற்கும் மேற்பார்வை அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

எனவே, அக்கூட்டத்தில், பொதுமக்கள் நியாய விலைக்கடைகள் தொடர்பான மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை தொடர்பான குறைகளைத் தெரிவித்துப் பயன்பெறலாம் எனவும் முகாமில் கொரோனா முன்னெச்சரிக்கை அறிவுரைகளை தவறாமல் கடைபிடிக்குமாறும் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!