அரியலூர் மாவட்டத்தில் இன்று 266 பேருக்கு கொரோனா

அரியலூர் மாவட்டத்தில் இன்று 266 பேருக்கு கொரோனா
X

பைல் படம்

அரியலூர் மாவட்டத்தில் இன்று புதிதாக 266 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

அரியலூர் மாவட்டத்தில் இன்று மட்டும் கொரோனாவால் 266 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று குணமடைந்து வீடுதிரும்பியர்வர்கள் 226 பேர். மருத்துமனைகளில் 2612 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்றுவரை 11303 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவில் இருந்து 8580 குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்றிற்கு இதுவரை 111 பேர் உயிரிழந்துள்ளனர்.

மருத்துவமனைகளில் இன்று எடுக்கப்பட்ட மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டவர்கள் 1261 பேர். இதுவரை 1,97,021 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் நோய்தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் 11303 பேர், நோய்தொற்று இல்லாதவர்கள் 1,85,718 பேர்.

அரியலூர் மாவட்டத்தில் இதுவரை நடத்தப்பட்ட சிறப்பு முகாம்கள் 9012, இதில் பரிசோதனை செய்யப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை 4,51,054 அதில் மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டவர்கள் 26,175 பேர். முகாம்களில் நடத்தப்பட்ட பரிசோதனைனகளில் நோய்தொற்று உறுதிசெய்யப்பட்டவர்கள் 1220 பேர். நோய்தொற்று இல்லாதவர்கள் 24854 பேர். பரிசோதனை முடிவு வரவேண்டியவர்கள் 101 பேர்.

கொரோனா இன்று முன்தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்கள் 1348 பேர். இதில் முதல் தடுப்பூசியை இன்று 1223 பேரும், இரண்டாவது தடுப்பூசியை 125 பேரும் போட்டுக்கொண்டுள்ளனர்.

நோய்பரவல் கட்டுப்பாட்டு மண்டலங்களாக ஊரகப்பகுதியில் 47 இடங்களும், பேரூராட்சியில் 1 இடங்களும், நகரப்பகுதியில் 11 இடங்களும் சேர்த்து 59 இடங்கள் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு கண்காணிப்பு செய்யப்படுகிறது

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!