அரியலூர் மாவட்டத்தில் இன்று 276பேருக்கு கொரோனா, 8 பேர் உயிரிழப்பு

அரியலூர் மாவட்டத்தில் இன்று 276பேருக்கு கொரோனா, 8 பேர் உயிரிழப்பு
X

பைல் படம்

அரியலூர் மாவட்டத்தில் இன்று 276 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இன்று ஒரேநாளில் மட்டும் சிகிச்சை பலன் இன்றி இறந்தனர்.

அரியலூர் மாவட்டத்தில் இன்றுமட்டும் கொரோனாவால் 276 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று 8 பேர் உயிரிழந்தனர். இன்று குணமடைந்து வீடுதிரும்பியர்வர்கள் 104 பேர். மருத்துமனைகளில் 2393 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்றுவரை 10283 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவில் இருந்து 7797 குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்றிற்கு இதுவரை 93 பேர் உயிரிழந்துள்ளனர்.

மருத்துவமனைகளில் இன்று எடுக்கப்பட்ட மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டவர்கள் 1030 பேர். இதுவரை 1,93,071 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் நோய்தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் 10283 பேர், நோய்தொற்று இல்லாதவர்கள் 1,82,788 பேர்.

அரியலூர் மாவட்டத்தில் இதுவரை நடத்தப்பட்ட சிறப்பு முகாம்கள் 8898, இதில் பரிசோதனை செய்யப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை 4,44,835 அதில் மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டவர்கள் 25575 பேர். முகாம்களில் நடத்தப்பட்ட பரிசோதனைனகளில் நோய்தொற்று உறுதிசெய்யப்பட்டவர்கள் 1165 பேர். நோய்தொற்று இல்லாதவர்கள் 24286 பேர். பரிசோதனை முடிவு வரவேண்டியவர்கள் 124 பேர்.

கொரோனா இன்று முன்தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்கள் 2543 பேர். இதில் முதல் தடுப்பூசியை இன்று 2531 பேரும், இரண்டாவது தடுப்பூசியை 12 பேரும் போட்டுக்கொண்டுள்ளனர்.

நோய்பரவல் கட்டுப்பாட்டு மண்டலங்களாக ஊரகப்பகுதியில் 47 இடங்களும், பேரூராட்சியில் 1 இடங்களும், நகரப்பகுதியில் 11 இடங்களும் சேர்த்து 59 இடங்கள் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு கண்காணிப்பு செய்யப்படுகிறது.

Tags

Next Story
அரசு புறம்போக்கு நிலத்தில் சாலை அமைப்பது..! ஆலை நிர்வாகத்துக்கு விவசாயிகளின் கடும் எதிர்ப்பு..!