அரியலூரில் மாற்றுத்திறனாளி ஒப்பந்தகாவலருக்கு ஓராண்டாக ஊதியம் வழங்கவில்லை என கலெக்டரிடம் புகார்

அரியலூரில் மாற்றுத்திறனாளி ஒப்பந்தகாவலருக்கு ஓராண்டாக ஊதியம் வழங்கவில்லை என கலெக்டரிடம் புகார்
X

அரியலூரில் மாற்றுத்திறனாளி ஒப்பந்த காவலர் சம்பளம் கேட்டு ககெலக்டர் அலுவலக புகார் பெட்டிளில் மனுவை போட்டார்.

அரியலூரில் மாற்றுத்திறனாளி ஓப்பந்த காவலருக்கு ஓராண்டாக ஊதியம் வழங்கவில்லை என கலெக்டரிடம் புகார் மனுஅளித்தார்.

மாவட்ட கலெக்டர் அலுவலக மாற்றுத்திறனாளி ஒப்பந்த இரவு காவலருக்கு ஓராண்டாக ஊதியம் வழங்கவில்லை என புகார். கொரோனா தொற்று பாதித்தநிலையில் வறுமையில் வாடும் அவலம்.

அரியலூர் -: அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரியும் மாற்றுத்திறனாளி ஒப்பந்த இரவு காவலருக்கு ஓராண்டாக ஊதியம் வழங்கப்படாத நிலையில், தற்போது கொரோனா தொற்று பாதிப்பும் ஏற்பட்டதால் ஊதியம் இன்றி வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.

அரியலூர் புது மார்க்கெட் தெருவை சேர்ந்தவர் குமார். வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி. இவர் விழுப்புரம் அடலாண்டா செக்யூரிட்டி பிரோ என்ற நிர்வாகத்தின் மூலம் அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தொகுப்பூதிய அடிப்படையில் கடந்த 2013 இல் இரவு காவலராக பணியமர்த்தப்பட்டார்.

கடந்த ஏழு ஆண்டுகளாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இரவு காவலராக பணியாற்றி வருகின்றார். இந்நிலையில் கடந்த ஓராண்டாக ஒப்பந்தகாரரிடம் இருந்து குமாருக்கு ஊதியம் வழங்கப்படவில்லை.

நேரிடையாக ஒப்பந்தகாரரிடம் கேட்டு ஊதியம் வழங்கப்படாததால், பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளார். அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து ஒப்பந்ததாரருக்கு பணம் அனுப்பப்பட்டுள்ளாதால், தங்களால் ஏதுவும் செய்யமுடியாது என்று அலுவலர்கள் பதில் கூறியுள்ளனர். இந்நிலையில் மாற்றுத்திறனாளி குமார் மற்றும் அவருடைய மனைவி மற்றும் மகள் ஆகிய மூன்று பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது குனமடைந்து வீடுதிரும்பி நிலையில் கையில் பணம் இல்லாமல் குமார் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார்.

எனவே நிலுவையிலுள்ள ஓராண்டு ஊதியத்தை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில் இல்லாமல் நேரடியாக மாத சம்பளம் அல்லது தினக்கூலி அடிப்படையில் பணி வழங்க வேண்டும் எனக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார். தற்போது கொரோனா தொற்றினால் மாவட்ட கலெக்டரிடம் நேரிடையாக மனு வழங்கமுடியாததால், கலெக்டர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள மரப்பெட்டியில் குடும்பத்துடன் வந்து மனுவை போட்டு சென்றுள்ளார்.

விழுப்புரம் அடலாண்டா செக்யூரிட்டி பிரோ என்ற நிர்வாகம் விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர் ஆகிய நான்கு மாவட்டங்களிலும் ஒப்பந்த அடிப்படையில் பலரையும் இதுபோன்று வேலைக்கு நியமித்துள்ளது. ஆனால் ஒருவருக்கும் மாத அடிப்படையில் முறையாக ஊதியம் வழங்கியது இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!