நெல் கொள்முதலுக்கு தனியார் அரவை ஆலைகளை ஈடுபடுத்த அரியலூர் கலெக்டர் முடிவு

நெல் கொள்முதலுக்கு தனியார் அரவை ஆலைகளை ஈடுபடுத்த அரியலூர் கலெக்டர் முடிவு
X
தனியார் அரவை ஆலைகள் விருப்ப கடிதத்தினை நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

அரியலூர் மண்டலம் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் சேகரிப்பது முதல் கழக கிடங்குகளில் கண்டுமுதல் அரிசியினை ஒப்படைப்பது வரையிலான விநியோக சங்கிலி மேலாண்மை திட்டத்தில் கழக அரவை முகவர்களை (முழு நேர / பகுதி நேரம்) மற்றும் கழகத்தில் இணையாத தனியார் அரவை ஆலைகளை ஈடுபடுத்த தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் முடிவு செய்துள்ளது.

எனவே, இந்நிகழ்வில் ஆர்வமுடைய தனியார் அரவை ஆலைகள் தங்களது விருப்ப கடிதத்தினை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல அலுவலகத்தில் 23.05.2022 தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

கூடுதல் விவரங்களுக்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!