அரியலூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய பயிற்சியில் சேர விண்ணப்பிக்க அழைப்பு
பைல் படம்.
அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் அரியலூர் 2022 -ஆம் ஆண்டுக்கான சேர்க்கை ஆன்லைன் மூலம் (www.skilltraining.tn.gov.in ) நடைபெற்று வருகிறது. 24.06.2022 முதல் 20.07.2022 வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
கல்வி தகுதி:
எட்டாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி /தோல்வி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு : 14 முதல் வயது வரம்பு இல்லை
ஓர் ஆண்டு மற்றும் ஈராண்டு தொழிற்பிரிவுகள்:
1) எலக்ட்ரீசியன்
2) பிட்டர்
3) டர்னர்
4) மோட்டார் மெக்கானிக்
5) வெல்டர்
6)கம்பியாள்
7)இயந்திரபட வரைவாளர்
8)உலோகத்தகடு வேலையாள்
பயிற்சியில் சேருவோருக்கான சலுகைகள் :
*மாதாந்திர உதவித் தொகை ரூ.750/-
*அரசு பள்ளிகளில் படித்த மாணவிகளுக்கு கூடுதலாக மாதம்தோறும் ரூ.1000/-
*விலையில்லா மடிக்கணினி,
*பஸ் கட்டண சலுகை,
*விலையில்லா மிதிவண்டி,
*விலையில்லா காலணிகள்,
*விலையில்லா சீருடைகள் மற்றும் தையற்கூலி,
*விலையில்லா பயிற்சி புத்தகங்கள் மற்றும் வரைபடக் கருவிகள் வழங்கப்படும்.
*படிக்கும்போதே உதவித்தொகையுடன் தொழிற்சாலைகளில் இன்டர்ன்ஷிப் டிரெய்னிங்.
*பயிற்சி முடித்தவுடன் கேம்பஸ் இன்டர்வியூ மூலமாக வேலைவாய்ப்பு.
* ஒரு வருட உதவித்தொகையுடன் கூடிய தொழிற்பழகுநர் பயிற்சி நேரில் வந்து இலவசமாக விண்ணப்பிக்கலாம் அல்லது ஆன்லைன் (www.skilltraining.tn.gov.in) மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் :
1. எட்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்
2. மாற்றுச் சான்றிதழ்(TC)
3. சாதிச் சான்றிதழ்(Community certificate)
4. ஆதார் அட்டை (Aadhaar card)
5. பாஸ்போர்ட் அளவு புகைப்படம் (Passport size Photo)
6. Email ID மற்றும் Cell Phone எண் அவசியம்.
7. விண்ணப்பக் கட்டணம் Rs.50/- செலுத்த
டெபிட் கார்டு(அ) கிரெடிட் கார்டு(அ) கூகுள் பே(அ) நெட் பேங்கிங்,
8. முன்னுரிமை சான்று (ஆதரவற்றோர் / முன்னாள் இராணுவத்தினர்/ முன்னாள் இராணுவ வீரர் மகள், மாநில அளவில் முதலிடம் பெற்ற விளையாட்டு வீரங்கனைகளுக்கு)
மேலும் விபரங்களுக்கு
முதல்வர்,
அரசினர் தொழிற்பயிற்சி
நிலையம்
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில்,
அரியலூர்
தொலை பேசி எண்:04329228408
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu