அரியலூர்: அண்ணா சிலைக்கு அமைச்சர் சிவசங்கர் மாலை அணிவித்து மரியாதை

அரியலூர்: அண்ணா சிலைக்கு அமைச்சர் சிவசங்கர் மாலை அணிவித்து மரியாதை
X

அரியலூர் மாவட்ட திமுக சார்பில், பேருந்து நிலையம் முன்பு உள்ள அணணாவின் திருவுருவச்சிலைக்கு , பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அரியலூரில், பேரறிஞர் அண்ணாவின் 113வது பிறந்தநாளை முன்னிட்டு, அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பேரறிஞர் அண்ணாவின் 113-வது பிறந்தநாள் விழா, அரியலூர் மாவட்ட திமுக சார்பில் கொண்டாடப்பட்டது. அரியலூர் பேருந்து நிலையம் முன்பு உள்ள அணணாவின் திருவுருவச்சிலைக்கு, மாவட்ட திமுக செயலாளரும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சருமான எஸ்.எஸ்.சிவசங்கர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அரியலூர் எம்எல்ஏ சின்னப்பா, திமுக நகரச்செயலாளர் முருகேசன் மற்றும் திமுக, மதிமுக, கட்சி பொறுப்பாளர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர். இதையடுத்து, அண்ணா சிலை அருகே, திமுக கொடிக்கம்பத்தில், அக்கட்சி கொடியை, அமைச்சர் சிவசங்கர் ஏற்றி வைத்தார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!