கடத்தல் மது பாட்டில்களை கைப்பற்றிய ஆண்டிமடம் போலீசாரை பாராட்டிய எஸ்பி

கடத்தல் மது பாட்டில்களை கைப்பற்றிய ஆண்டிமடம் போலீசாரை பாராட்டிய எஸ்பி
X

வெளிமாநல கடத்தல் மது பாட்டிகளை பறிமுதல் செய்த ஆண்டிமடம் போலீசாரை எஸ்.பி பாராட்டி வெகுமதி வழங்கினார்.

வெளிமாநில கடத்தல் மது பாட்டில்களை கைப்பற்றிய ஆண்டிமடம் போலீசாரை எஸ்.பி பாராட்டி வெகுமதி அளித்தார்.

அரியலூர் மாவட்டம் பெரியாத்துகுறிச்சி மாவட்ட எல்லைச் சோதனை சாவடியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில் லாரியில் மதுபாட்டில்கள் கடத்தி வருவதாக ஆண்டிமடம் காவல் நிலையத்தில் கிடைத்த ரகசிய தகவலின் பேரில் சோதனை சாவடியில் ஆண்டிமடம் காவல்நிலைய ஆய்வாளர் குணசேகரன், உதவி ஆய்வாளர் சரத்குமார் மற்றும் காவலர்கள் தலைமையில் தீவிரவாகன தணிக்கை செய்தனர். அப்போது நெய்வேலியில் இருந்து சாம்பல் ஏற்றிக்கொண்டு வந்த டாரஸ் டிப்பர் லாரியில் பாட்டில்கள் கடத்தி வந்ததை கண்டறிந்தனர்.

டிப்பர் லாரி டிரைவர் ஆரோக்கியசாமி (47) மற்றும் ராஜேஷ் (28) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து மது பாட்டில்களை கைப்பற்றினார்கள்.

துரிதமாக செயல்பட்டு நடவடிக்கை எடுத்த ஆண்டிமடம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் குணசேகரன் காவல் உதவி ஆய்வாளர் சரத்குமார் மற்றும் காவலர்களை பாராட்டு விதமாக அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் K. பெரோஸ்கான் அப்துல்லா மாவட்ட காவல் அலுவலகத்தில் பாராட்டு சான்றிதழ் வழங்கி,

ஊக்கத்தொகை அளித்து பாராட்டினார்கள். தனிப் பிரிவு காவல் ஆய்வாளர் செல்வகுமாரி மற்றும் உதவி ஆய்வாளர் ரவி உடன் இருந்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!