அரியலூர்: ஆலங்குளம் ஏரியில் செத்து மிதக்கும் மீன்களால் துர்நாற்றம்

அரியலூர்: ஆலங்குளம் ஏரியில் செத்து மிதக்கும் மீன்களால் துர்நாற்றம்
X

ஆலங்குளம் ஏரியில் செத்து மிதக்கும் மீன்கள்.

அரியலூர் மாவட்டம் ராயம்புரம் கிராமத்தில் உள்ள ஆலங்குளம் ஏரியில் செத்து மிதக்கும் மீன்களால் துர்நாற்றம் ஏற்பட்டுள்ளது.

அரியலூர் மாவட்டம், செந்தறை அருகே ஏரியில் மர்மமான முறையில் செத்து கிடக்கும் மீன்களால் துர்நாற்றம் வீசுவதால், அதனை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செந்துறை அடுத்த ராயம்புரம் கிராமத்தில் உள்ள ஆலங்குளம் ஏரியில் நேற்று காலை திடீரென மா்மமான முறையில் மீன்கள் செத்து மிதக்கத்தொடங்கின. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார கேடு ஏற்பட்டு பொதுமக்களுக்கு நோய் தொற்றுகள் ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.

எனவே சம்பந்தப்பட்ட ஊராட்சி மற்றும் ஒன்றிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, ஏரியில் செத்து மிதக்கும் மீன்களை அப்புறப்படுத்தவும், ஏரியில் உள்ள நீரை பரிசோதனை செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
நவீன வசதிகளுடன் 103 ரெயில் நிலையங்கள் புதுப்பிப்பு – பிரதமர் மோடியின் அதிரடி திறப்பு!