வீ்ட்டின் மொட்டை மாடியை மழை நீர் சேகரிப்பு தொட்டியாக மாற்றிய விவசாயி
விவசாயி வீட்டின் மொட்டை மாடி.
விவசாயி ஒருவர் தனது வீட்டு மொட்டை மாடியில் கொட்டிய மழை நீரை ஒரு லட்சம் லிட்டர் அளவுக்கு சேகரித்துள்ளார். அந்த விவசாயியின் பெயர் ஆர்கே செல்வமணி. இயற்கை ஆர்வலர் மற்றும் விவசாயி.
இதுபற்றி அவர் என்ன கூறுகிறார் என பார்ப்போமா?
நான் புதியதாக கட்டி வரும் வீட்டில் மொட்டை மாடியில் விழும் மழைத்துளிகளை மழை தண்ணீரை கடந்த நவம்பர் மாதத்தில் மட்டும் சுமார் ஒரு லட்சம் லிட்டர் மழை நீரை சேகரித்து குடிப்பதற்கும் வீட்டு உபயோகத்திற்கும்சேகரித்து சேமித்து வைத்துள்ளேன் .இது எங்கள் குடும்பத்திற்கு ஒரு ஆண்டுக்கு போதும் இருந்தாலும் தொடர்ந்து பெய்யும் மழை நீரை வீட்டுக்கு தோட்டத்திற்கு பயன்படுத்தும் வகையில் சொட்டு நீர் பாசன வசதிகளும் செய்துள்ளேன் .
இந்த கட்டமைப்பில் வருடத்திற்கு நான்கு முதல் ஆறு லட்சம் லிட்டர் வரை மழைநீரை எனது வீட்டில் கட்டமைக்கப்பட்ட முறையில் தொட்டியில் வடிகட்டி சேமிப்பதற்கு வழிவகை செய்துள்ளேன். உபரி நீரை போர்வெல்லில் ரீசார்ஜ் செய்யவும் வழி செய்துள்ளேன் . தொட்டியின் மேல் பரப்பையும் உபயோகப்படுத்தும் வகையில் கட்டமைத்துள்ளேன்.
இதுபோல் ஒவ்வொரு வீட்டிலும் கூரையில் விழும் தண்ணீரை சேமித்தாலே நிலத்தடி நீர் மட்டும் பாதுகாக்கப்பாடுவதுடன் வெள்ள அபாயத்திலிருந்தும் சுகாதாரமான குடிநீரை நாம் பெற முடியும். புதிதாக கட்டிடம் கட்ட உள்ள நபர்களும் பழைய வீட்டிடை பார்வையிட்டு மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைப்பதற்கு ஆர்வம் உள்ள நபர்கள் எங்கள் பணிகளுக்கு நேரம் ஒதுக்கி செயல்பட ஒத்துழைப்பு கொடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu