அரியலூர்: 9 புதிய மின்மாற்றிகள் மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைப்பு

அரியலூர்: 9 புதிய மின்மாற்றிகள் மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைப்பு
X

அரியலூர் மாவட்டத்தில் புதிய மின் மாற்றிகளை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்.

அரியலூர் மாவட்டத்தில் 9 புதிய மின்மாற்றிகளை மக்களின் பயன்பாட்டுக்கு அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பில் அரியலூர் மாவட்டம் குமிழியம், வெண்ணங்குறிச்சி, நல்லாம்பாளையம், செந்துறை ராயல் சிட்டி மற்றும் அண்ணாநகர் பகுதிகளில் மின்சாரம் சீராக மக்களுக்கு கிடைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள புதிய மின்மாற்றிகளை மாநில பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தொடக்கி வைத்தார். ஆட்சியர் பெ.ரமண சரஸ்வதி உட்பட பலரும் உடனிருந்தனர்.

அதேபோல், ஆண்டிமடம் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஜெ.குளத்தார், காட்டாத்தூர், அணிகுதிச்சான், பூவானிப்பட்டு உள்ளிட்ட கிராமங்களில் மக்களுக்கு சீரான மின்சாரம் கிடைக்கும் வகையில் புதிதாக அமைக்கப்பட்ட மின்மாற்றிகளை எம்.எல்.ஏ. க.சொ.க.கண்ணன் நேற்று மக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் உதவி செயற்பொறியாளர் சிலம்பரசன், உதவி மின் பொறியாளர் ரவிச்சந்திரன் மற்றும் அந்தந்த கிராம உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்