/* */

75வது சுதந்திர தினம்: ரயில் நிலையம் பேருந்து நிலையங்களில் தீவிர சோதனை

அரியலூர் ரயில் நிலையம், பேருந்து நிலையங்களில் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

HIGHLIGHTS

75வது சுதந்திர தினம்:  ரயில் நிலையம் பேருந்து நிலையங்களில் தீவிர சோதனை
X

75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அரியலூர் ரயில் நிலையம், பேருந்து நிலையங்களில் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.



நாட்டின் 75வது சுதந்திர தினம் நாளை சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஃபெரோஸ்கான்அப்துல்லா உத்தரவின் பேரில் துப்பறியும் நாய்களுடனும், மெட்டல் டிடெக்டர் கருவிகளைக் கொண்டு காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 900 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

அரியலூர் மாவட்ட எல்லைகள், ரயில் நிலையங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான கடைவீதிகள், பஸ் நிலையங்கள், வணிக வளாகங்கள், தங்கும் விடுதிகளில் (லாட்ஜ்) உள்ளிட்ட இடங்களில் காவல்துறையினர் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.

அரியலூர் நகர காவல் ஆய்வாளர் கோபிநாத் தலைமையிலான காவல்துறையினர் ரயில் மற்றும் பேருந்து நிலையங்களில் மெட்டல் டிடெக்டர், மோப்பநாய் உதவியுடன் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

மாவட்ட எல்லைகள் மற்றும் முக்கிய பிரதான சாலைகளில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

Updated On: 14 Aug 2022 1:14 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    50 ஆண்டு திருமண வாழ்க்கை எனும் பொன்விழா! வாழ்த்தலாம் வாங்க
  2. லைஃப்ஸ்டைல்
    அம்மா அப்பாவுக்கு திருமண நாள் வாழ்த்து கவிதைகள்
  3. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வில் 92.58 சதவீதம் மாணவர்கள்...
  4. சோழவந்தான்
    உலக நன்மைக்காகவும் மழை வேண்டியும் சோழவந்தானில் யாகம்..!
  5. திருத்தணி
    சரக்கு வாகன ஓட்டுனரை வெட்டி வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையன் கைது
  6. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதியம்மன் ஆலயத்தில் திருக்கல்யாண விழா..!
  7. நத்தம்
    நத்தம் பகவதி அம்மன் திருவிழா: காப்புக்கட்டுடன் தொடங்கியது..!
  8. கோவை மாநகர்
    காந்திபுரத்தில் பேருந்து மோதி தொழிலாளி பலி..!
  9. லைஃப்ஸ்டைல்
    எனக்கு தாலாட்டு பாடிய 'இரண்டாம் தாய்' அக்காவுக்கு பிறந்தநாள்...
  10. லைஃப்ஸ்டைல்
    ஆசையுடன் அப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!